Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் கருமேகங்கள் கலைகின்றன.(கருமேகங்கள் ஏன் கலைகின்றன  என்பது கருமேகங்கள் கலைகின்றன
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இதில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனனன், இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை,
ராமேஸ்வரம்போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கி றார்கள். முந்தைய திரைப்படங்கள்
போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத. தனது பாணியிலான
வெகு இயல்பான வாழ்வியல்
கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான்  தெரிவித்தார்


கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்  காக இந்தியாவிலுள்ள. பல நடிகை களிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகியிருக்  கிறார். இத்திரைப் படத்தின்  மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக. கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார்.மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.

 

Related posts

கூலி பட விமர்சனம்

Jai Chandran

Jayam Ravi’s ‘Siren’ Teaser released

Jai Chandran

அதர்வாவின் டி என் ஏ பட வெற்றி கொண்டாட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend