ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் டெடி. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. ஓடிடியில் வெளியானாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இப்படத்தில் ‘டெடி’ பொம்மைதான் முக்கிய பாத்திரம். படத்தில் நிஜ மனிதன் போலவே நடக்கும், பேசும். குறிப்பிட்ட டெடி பொம்மை வேடத்தில் குள்ள நடிகர் கோகுல் என்பவர் நடித்துள்ளார். பொம்மையின் தலை மட்டும் கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்துள்ளனர். டெடி யாக நடித்த. கோகுலை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பட இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.
அவர் கூறும்போது, “காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான் மிஸ்டர் கோகுல், நாடக நடிகர். பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தியவர். தலை மட்டும் 3டி முறையில் ‘பர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜி’ முறையில் படமாக்கப்பட்டது,” என்றார் இயக்குனர்.