Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.தாணு, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி

ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்குகலைமாமணி விருது வழங்கி வருகிறது. மூத்த இளைய கலைஞர்கள் என 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக் கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, இளம் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசை அமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


பல்வேறு வெற்றிபடங்களை தயாரித்தளித்ததுடன் தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ்குமார், ரவி மரியா கலைமாமணி விருது பெறு கின்றனர்.
டிவி சீரியல் நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருதுக்கு தேர்வாகி உள்ளனர். சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், திரைப்பட நடன இயக்கு னர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோரும் கலை மாமணி விருது பெறுகின் றனர்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ வாழ்த்து தெரிவித்துள்ளது. சங்க தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பெரும்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ முன்னாள்‌ தலைவரும்‌, பிலிம்‌ பெடரேஷன்‌ தலைவருமான கலைப்புலி எஸ்‌.தாணு, மற்றும்‌. தயாரிப்பாளர்கள்‌ ஐசரிகணேஷ்‌, மனோஜ்குமார்‌, கெளதம்‌ வாசுதேவ்‌
மேனன்‌, ஜாகுவார்தங்கம்‌, நடிகரும்‌, தயாரிப்பாளர் களுமான ராமராஜன்‌,
சிவகார்த்திகேயன்‌, ஆகியோருக்கு தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்‌. மேலும்‌, கலைமாமணி விருது பெறும்‌ நடிகர்‌, நடிகையர், இயக்குனர்கள்‌, தொழில்நுட்ப கலைஞர்கள்‌, பத்திரிகையா ளர்கள்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌
கொள்கிறோம்‌. மேற்கண்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவித் துள்ள தமிழக அரசிற்கும்‌, தமிழக முதல்வாருக்கும்‌, துணை முதல்வருக்கும்‌, செய்தி மற்றும்‌ விளம்பரத் துறை அமைச்சாருக்கும்‌, இயல்‌ இசை நாடக மன்றத்‌ தலைவர்‌ தேவாவுக்கும்‌, அதன்‌ உறுப்பினர்களுக்கும்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பாக நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
அதேசமயம்‌ சிறு முதலீட்டில்‌ தயாரிக்கப்பட்டு 2015,2016,2017 ஆண்டுக்கான மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைத்துத்‌ தயாரிப்பாளர்க ளுக்கும்‌. மானியத்தொகை யினை வழங்கி அந்த தயாரிப்பாளர்களின்‌ வாழ்வில்‌ உள்ள இருளை நீக்கி வெளிச்சம்‌ கொடுக்குமாறு தமிழக முதல்வர்‌, துணை முதல்வர், செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ ஆகியோரிடம்‌ தமிழத்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ இருகரம்‌ குவித்து கேட்டுக்கொள் கிறோம்‌.
இவ்வாறு அந்த அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சினம் (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா

Jai Chandran

Shah Rukh Khan’s Jawan Music Right Records with ₹36 Crores Deal!*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend