Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூர்யா படம் ட்ரெய்லர் 50 லட்சம் வியூஸ், நவம்பர் 12ல் ரிலீஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. டிரெய்லரில் சூர்யாவின் விறுவிறுபான  வசனக்களில் சூடு பறக்கிறது. விமான கம்பெனி தொடங்குவதற்கு எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கான காட்சிகள்   பரபரப்பாக நகர்கிறது.

விமானத்தில் செல்லும்போது ஏர் உழுபவன் விமானத்தில் பறப்பான் என் வசனம் பேசுவது,  விமான டிக்கெட் விலை 1 ரூபாய் என சொல்ல மற்றவர்கள் சிரித்துஅவரை பரிகாசிப்பதுமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு வேகம் சேர்ந்திருக்கிறது.

சூர்யாவை  விமான நிறுவனம் தொடங்கவிடாமல் தடுக்கும் அதிகார வர்க்கத்தின் திட்டங்களில் வில்லத்தனம் ஊடுருவது என ட்ரெய்லர் தூள் பறக்கிறது, விமானம் தரையிறங்க அனுமதிக்காதபோது சாலையில் விமானத்தை இறக்கும் ஆக்ரோஷம் என சூர்யாவின் அசத்தலான காட்சிகளுடன் டிரெய்லர் பரபரக்கிறது. மேலும் அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க செய்திருக்கின்றனர்.

கலை 10 மணிக்கு வெளியான டிரெய்லர் மளமள வென தீயாய் நெட்டில் இறக்கை கட்டி பறந்து மாலைக்குள் 5 மில்லியன் வியூஸ் அதாவது 50 லட்சம்பேரால் பார்க்கபபட்டு   சாதனை படைத்திருக்கிறது  தொடர்ந்த  வுய்ய்ஸ் கூடிய வண்ணமிருக்கிறது.

சூரரைப் போற்று பட ரிலீஸ் நவம்பர் 12ம்  தேதி அமேசான் பிரைமில் தீபாவளிக்கு அட்வான்ஸ் விருந்தாக வெளியாகும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Related posts

நடிகர் சேது மாரடைப்பில் திடீர் மரணம்

Jai Chandran

இயக்குனர் தங்கர்பச்சன் விடுத்த எச்சரிக்கை.. பரபரப்பு அறிக்கை..

Jai Chandran

Yogi Babu returns as a Cop Role

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend