Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுந்தர் சி , ஜெய் நடிக்கும் சைக்கோ திரில்லர்  ‘பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக . குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி.

கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடித்துள்ளனர். முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் கதை இறுதிக்காட்சி வரை சீட் நுனியில் அமர வைக்கும்  திரில்லராக உருவாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத் தை விளக்கும் போஸ்டர் .இவை அனைத் துமே மிகவும் வித்தியாசமாக இருப்ப துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். மே மாதம் வெளியாக விருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது. விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார் .ஏக்கு  மாறு  தோ துக்கடா வாங்கடா ஜெயிள்ள தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா  எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர் .

 இதில் சுந்தர் சி , ஜெய்யுடன் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் பத்ரி.
தயாரிப்பு  அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர். ஒளிப்பதிவு கிருஷ்ணசுவாமி .
இசை நவநீத் சுந்தர். எடிட்டிங்  பென்னிஆலிவர் . சண்டைப்பயிற்சி ராஜசேகர். திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி.
மக்கள் தொடர்பு  ரியாஸ் கே அஹ்மத்.

Related posts

மட்டி படம் 6 மொழிகளில் டிச 10 ல் ரிலீஸ்

Jai Chandran

மருத (பட விமர்சனம்)

Jai Chandran

KodiyilOruvan Vijayantony’s NaanVaruven Second Single

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend