Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்ஜிஆர், ரஜினி படம் பார்த்ததுபோல் ரசிகர்கள் மகிழ்ச்சி : சுல்தான் பற்றி கார்த்தி பெருமிதம்..

கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான் . ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெப்போலியன், லால், பொன்வண்ணன், மயில்சாமி, சென்றாயன், பிரின்ஸ், காமராஜ் ஆகியோ ருடன் 100 ஜிம்பாய்ஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.ஸ்ரீதர் தயாரித்துள்ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு. விவேக் மெர்வின் இசை. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை. ரூபன் எடிட்டிங்.
இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது.
இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஓட்டலில் சுல்தான் படத்தின் வெற்றி விழாவும், நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. படக் குழுவினர் கலந்துகொண் டனர். சுல்தான் படத்தை எமிஜிஆர், ரஜினிசார் படம்போல் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றார் கார்த்தி.

சுல்தான் வெர்றி விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:
நம்மை ரொம்ப பாதிக்கிற விஷயம் என்னவென்றால் நம்மை காயப்படுத்தும் விஷயமாக இருக்கும். அந்த சமயத்தில் நம்மை வாழ்த்தி யவர்களை நாம் மறந்து விடுகிறோம். அப்படி மறக்கக் கூடாது. அந்த வகையில் இந்த படத்தை பாராட்டிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. முதலில் இந்த படம் எதற்காக எடுக்கப்பட்டது என்பதை சரியாக புரிந்துக்கொண்டு வாழ்த்திய எல்லோருக்கும் முதல் நன்றி.
சுல்தான் கதையை கேட்ட போது 10 வயது பையனாக உணர்ந்தேன். 100 பேர் படத்தில் வந்தால் எப்படி இருக்கும், எனக்கு 8 அடியில் ஒரு பாடி காட், 3 அடியில் ஒரு பாடிகாட் என்றதும் ஒரு பேட்ண்டசி படமாக தோன்றி யது.என்னை காப்பாற்றுவதற் காக இத்தனை பேர் இருக்கி றார்கள் என்று சொல்லும் போது ஒரு சின்ன பையனின் உணர்வு எப்படி இருக்கும். அப்படித்தான் இந்த கதையை பார்த்தேன். அதேபோல் கைதி பட கதையை லோகேஷ் என்னிடம் சொன்னபோது ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரா ரசித் தேன், ஃபிலிம் லவ்வரா ரசித் தேன். பல தரப்பட்ட ரசனை கள் இருக்கிறது. நம்மால் சிந்து பைரவியும் பார்க்க முடியும் கானா பாட்டும் கேட்க முடியும். என்னுடைய பல ரசனைகளுக்கு ஏற்பத்தான் எனக்கு என்ன திரையில் பார்க்கணும் என்று விரும்புகி றேனோ அப்படித்தான் ஒவ்வொரு படமும் தேர்ந் தெடுக்கிறேன். டிரெய்லரில் அந்த கதை எப்படிபட்டது என்பதை சொல்லிவிடுகி றோம் . இது மாஸ் படம் இதை பார்க்கும்போது எந்த லாஜிக் பற்றியும் யோசிக்கா தீர்கள் என்று கூறிவிடுகிறோம். நீங்கள் படம் பார்க்கும்போது உங்களை யோசிக்க வைத்தால் அப்போது தோற்றுவிட்டதாக அர்த்தம். ஆனால் இரண்டரை மணி நேரம் யோசிக்கமல் படம் பார்க்க வைத்துவிட் டால் அதுதான் வெற்றி, இந்த படத்தை நேர்மையாக செய்து விட்டோம் என்று அர்த்தம். அந்த வகையில் சுல்தான் படத்துக்கு கிடைத்த பாசிடிவ் ஃபீட்பேக் சந்தோஷமாக இருந்தது.
முதல் நாள் தியேட்டரில் போய் காலையிலே 5 மணிக்கு ஷோ பார்ப்பதில் ஆரம்பித்து, ’ரொம்ப நாளைக்கப்பறம் உங்களை ஸ்டைலிஷா ஆக்‌ஷன் காட்சியில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கி றது’ என்று ரசிகர்கள் எல்லோரும் சொன்னபோது கிடைத்த ஆனந்தம் மிகவும் பெரியது. அவங்களுக்கெல் லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

சுல்தான் படத்தை நான் ரசித்து ரசித்து செய்தேன். முதல்நாள் ஷூட்டிங் தொடங்கும்போதே இது பெரிய சுமையாக இருக்கும் என்பது தெரியும். தயாரிப்பாளர் தாங்குவாரா என்று எண்ணினேன். ஆனால் எனக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அந்த பரவசத்தோடு இந்த படம் உருவானது. படத்தில் லால் சார் கண்டிப்பாக வேண்டும் என்று இயக்குனர் கேட்டார். அவர் அந்த கதாபாத்திரத்தின் எல்லா பரிமாணத்திலும் நடித்தார். சுல்தான் என்ற கேரக்டரை அவர் சப்போர்ட் செய்து கொண்டே இருப்பார். ஒரு இடத்தில் கூட விட்டுகொ டுக்க மாட்டார். கடைசி காட்சி களில் அவர் சொல்லும் வசனம் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த வசனங்களை இந்த சிறிய வயதில் இயக்குனர் பாக்கி உணர்ந்து எழுதியது எனக்கு ஆச்சர்ய மாக இருந்தது. ’சாகறதுக்கு அப்பறமதான் நிம்மதி கிடைக்கும்ன்னு நினைச்சேன் ஆனால் சாகறதுக்கு முன்னாடியே 4 மாசம் சந்தோஷமாக வாழ்ந்துட் டேன்’ என்று சொல்லும் வசனம் அவ்வளவு பக்குவ மானதாக இருக்கும். அதை லால் சார் சொன்னபோது அதில் ஆழம் இருக்கும் .


ஒரு படம் வெற்றி பெறுகிற தென்றால் அதில் நிறைய உண்மைகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த எமோஷன் களை படத்தில் கொண்டு வந்தது பெரிய விஷயம். படம் பார்க்கும்போது எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந் தது. எங்களுக்கு பிடித்தது போலவே ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. நாங்கள் எதெல்லாம் ரசித்தோமோ, எதற்கெல்லாம் கைதட்டி னோமோ அதையெல்லாம் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கைதட்டி வரவேற்கிறார்கள் என்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நைட் ஷோ படம் பார்க்கும்போது கிளைமாக் ஸில் கடா எழுந்து நிற்கும் போதே ரசிகர்கள் கைதட்டு கிறார்கள், ’கடா எந்திரிச்சிட் டான் இனிமே யாரும் எதுவும் பண்ணமுடி யாது’ன்னு சொல் கிறார்கள். சின்னவயதில் எப்படி ரஜினி சார் படமும், எம்ஜிஆர் படமும் பார்த்து கைதட்டி ரசித்தோமோ அப்படி ஆடியன்ஸ் எல்லாவற் றையும் மறந்து சந்தோஷமாக கைதட்டி ரசிக்கிறார்கள் என்பதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.
நம் ஊரில் படம் பார்க்கப் போவதென்பது திருவிழா வுக்கு போகிறமாதிரி. டிரஸ் செய்துகொண்டு பக்கத்து வீட்டில் சொல்லி, நீ பாக்க லையா, நா இன்னிக்கி பார்க்கப்போகிறேன் என்று சொல்லிச் செல்வது மகிழ்ச்சி யான விஷயம். நம் ஊரில் திரை அரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது நல்ல கலாச்சாரம், அதை ரொம்ப நாட்களாக மிஸ் செய்துவிட் டோம். இப்போது அதை பாதுகாப்பாக செய்ய முடியும், மாஸ்க் போட்டுகிட்டு போய் படம் பார்க்க முடியும் என்பது பெரிய ரிலீஃப். நிறைய பேர் எனக்கு போன் செய்து அதைத் தான் சொன்னார்கள். ’ஏங்க நான் பார்த்துவிட்டேன். பசங்க பார்க்கணும்னு சொன்னதாலே அவர்களை ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்கு மால் தியேட்டர்களுக்கு அழைத்து சென்று காட்டினோம், அப்படி ரசித்தார்கள் என்று எல்லோ ரும் என்னிடம் சொன்னார்கள். எதற்காக இந்த கதையை 3 வருடத்துக்கு முன்பு எடுத்து கொண்டு கொரோனா காலத் தையும் தாண்டி சுமந்து வந்தோமோ அதை சாதித்து விட்டோம் என்பதில் மிகவும் சந்தோஷம். அதற்கு நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி.

பிரஸ்ஷோ பார்த்துவிட்டு வந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் பார்க்கலாம் படம் ஹிட் என்றீர்கள். அதற்கு பெரிய நன்றி. அதேபோல் எந்த வொரு தயாரிப்பும் எல்லோ ரையும் திருப்திபடுத்த முடி யாது. 60 சதவீதம் மக்களுக்கு பிடித்து விட்டாலே அந்த படம் பெரிய ஹிட் என்று சொல்வார்கள். ஒவ்வொருவ ருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கிறது அதை நாம் மதிக்கிறோம். ஒவ்வொரு வருக்கும் அவங்க ரசனைதான் உயர்ந்ததாக தெரியும். எனக்கு இது பிடிக்கவில்லை இது ஓடாது என்று எண்ணக்கூடும் ஆனால் அது சரியில்லை ரசனைகள் பலவிதம் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் இந்த திரையுலகில் நாம் இருக்க முடியும். சுல்தான் படத்தை ஏற்றுக் கொள் வார்கள் என்று எப்படி நம்பினோமோ அப்படியே அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்காரர்கள் சந்தோஷப் படுகிறார்கள் என்று கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் தியேட்டருக்கு வரும் போது அந்த சந்தோஷத்தை நான் பார்க்கிறேன். தியேட்டர் காரர்கள் என்னிடம் கைகுலுக்கி ’நீங்க தியேட்ட ரில் படம் ரிலீஸ் செய்தீர்கள், ரொம்ப நன்றி’ என்கிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷ மாக இருக்கிறது. அங்குள்ள ஸ்டாஃப்கள் முகத்திலும் ஒரு சந்தோஷம் இருந்தது. அதுதான் எங்களுக்கு நெகிழ்ச்சியான விஷயமாக தெரிந்தது. அதேமாதிரி இறுக்க மாக இருந்த மனநிலையில் இந்த படத்துக்கு வந்தபிறகு அது மாறுகிறது என்று சொன்னது பெரிய சந்தோஷம்.


இந்த படத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணன் சார் நடித்தி ருக்கிறார். அவர் எனக்கு மாமனாராக நடிக்கும்போது படம் பிளாக் பஸ்டர் ஆகிவிடு கிறது. பருத்திவீரன், சுல்தான், கடைக்குட்டி சிங்கம் என்று 3 படங்களில் இது தொடர்ந்தி ருக்கிறது. இதில் மயில்சாமி சார் நடித்திருக்கிறார். அவரது சிரிப்போ சிரிப்பு டேப்பில் அந்த காலத்தில் பேசி இருப் பார். அந்த டேப் கிழியற அளவுக்கு அதை கேட்டு ரசித்திருக்கிறோம். அதே போல் அவர் எல்லா கால கட்டத்திலேயேயும் நற்பணிகள் செய்வது எனக்கு தெரியும். அவர் கையில் பத்து பைசா இருக்காது, ஆனால் 10 பைசா வட்டிக்கு கடன் வாங்கி உதவி செய்வார். அந்த மனசு எம்ஜிஆரிடமிருந்து அவருக்கு வந்திருக்கிறது என்று நினைக் கிறேன்.
சுல்தான் படத்தில் நிறையபேர் புதுமுகங்களாக நடித்திருக் கிறார்கள். அவர்களை நடிக்க வைத்தது சவாலான விஷயம். எந்த கட்டத்திலும் நண்ப னுக்கு துரோகம் செய்யாத உணர்வை இந்த படத்தில் காட்டியது அவ்வளவு வரவேற்பு பெற்றது. நிறைய பேரை இந்த படம் அடை யாளம் காட்டி இருக்கிறது. பிரபு, காமராஜ், சென்றாயன் எல்லோரும் அவ்வளவு அழகாக செய்திருக்கிறார்கள். எப்போதும் அண்ணன் சூர்யா ஒரு விஷயம் சொல்வார். நாம் செய்யும் விஷயம் அந்த நேரத்தில் பலன் தராவிட்டா லும் அது சேமிப்பு கணக்கு போன்றது எப்போதாவது பலன் கொடுக்கும் என்பார். அதுபோல்தான் சென்றாயன் நடிப்பை எங்கோ நான் பார்த்து ரசித்ததுதான் இன்று அவருக்கு பலனாக மாறி இருக்கிறது என்று நம்புகி றேன். நாம் செய்யும் கடின உழைப்பு நமக்கு சேமிப்பாக இருந்து உதவும் என்பதை நான் முழுமையாக நம்புகி றேன். அதேபோல் இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்வின் பாடல்கள் எல்லோர் மத்தியிலும் சென்று சேர்திருக் கிறது. அதை எடிட்டர் ரூபன் படத்தில் கொண்டுவந்த விஷயமும் அப்படி. படத்தில் ஒரு பாட்டு வந்தாலே இருக்கையை விட்டு எழுவார் கள் ஆனால் இந்த படத்தில் அப்படி எழ முடியாது ஏனென் றால் பாட்டுக்கு நடுவில் கதை இருக்கும். இத்தனை கேரக்ட ரை வைத்து இந்த படத்தை கொரோனா காலத்தில் முடித் தது என்பது சாதாரணமான விஷயமாக இல்லை. இந்தபடத்துக்கு ரீ ரிக்கார்டிங் செய்ய யுவனிடம் கேட்ட போது அவர் கண்டிப்பாக செய்கிறேன் குறித்த நேரத்தில் நீங்கள் படத்தை வெளியிட நான் செய்து தருகிறேன் என்று சொல்லி அதை செய்துகொடுத் தார். எல்லோரும் படம் பார்த்துவிட்டு யுவன் இந்த படத்தில் தனி ஹீரோ என்று சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் அவருக்கு பிடித்து விட்டால் அதற்கு அவர் தரும் உழைப்பு மிகப்பெரியது. அவரது டீம் இரவு பகல் தூங்கம் இல்லாமல் இதற்காக உழைத்தார்கள். அதற்கு நன்றி சொல்ல வேண்டும். நடிகர் பிரின்ஸ், பிரபு, காமராஜ் என எலோரும் நன்றாக நடித்திருக் கிறார்கள். தயாரிப்பாளர் பிரபு இந்த படத்தை தியேட்டரில் ரிலீச் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒடிடியில் இந்த படத்தை பார்த்தால் இவ்வளவு பாராட்டுவார்களா என்பது தெரியாது அதுவுமில் லாமல் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென்று எண்ணித் தான் எடுத்தோம்.

அதற்காக கடுமையாக உழைத்தோம். எங்கள் உழைப்புக்கும் நம்பிக் கைக்கும் மக்கள் நல்ல பதில் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி. எவ்வளவு நன்றி சொன்னாலும் அதுபோதாது. எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து வாழ்த்துகிறார்கள் மவுத் பப்ளிசிட்டி மாதிரி பெரிய விஷயம் எதுவும் கிடையாது. யார் சொல்வதை யும் நம்ப மாட்டோம் பக்கத்து வீட்டுக்காரர் சொல்வதை நம்புவோம். அந்த வகையில் ஒவ்வொரு பக்கத்துவீட்டு காரர்களுக்கும் நன்றி சொல் லிக்கொள்கிறேன். ஏனென் றால் அவர்கள்தான் மறுபடியும் மறுபடியும் படம் பார்க்க எல்லோரையும் தியேட்டருக்கு வரவழைத் திருக்கிறார்கள். இந்த படம் பார்த்து சின்னபசங்கெல்லாம் ஜெய் சுல்தான் என்கிறார்கள். சின்னவயதில் நான் பார்த்து ரசித்த படம்போல் இருக்க வேண்டும் என்று எண்ணி னேன் அதுபோல் வந்திருக் கிறது. அதற்கு ஒளிப்பதிவாளர் சத்ய சூர்யனுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் நான் அழகாக இருக்கேன் என்றும் சொல்கிறார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு தியேட்ட ருக்கு வரும்போது பலமாக வரவேண்டும் என்று எண்ணி னோம் அந்த வகையில் யோகிபாபு ஒரு பலம், ராஷ்மிகா ரசிகர்கள் ஒரு பெரிய பலம். அதேபோல் விவேக் மெரிவின், யுவன் சங்கர் ராஜா போன்று நிறைய பேர்களுடைய பலம் இந்த படத்தில் சேர்ந்திருக்கிறது. எல்லோரையும் திருப்திப டுத்தி இருக்கிறது என்பது சந்தோஷம்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.

Related posts

உலக திரைப்படவிழாவில் ’மழையில் நனைகிறேன்” திரையீடு

Jai Chandran

குட்டி லவ் ஸ்டோரி’படத்தை இயக்கும் கவுதம்-3 இயக்குனர்கள்

Jai Chandran

நயன்தாரா படத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend