Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“லவ் டுடே” டிரைலரை எஸ் டி ஆர் வெளியிட்டார்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் (எஸ் டி ஆர்) இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள திரையரங் குகளில் நவம்பர் 4 அன்று இப்படம் வெளியாகிறது.

‘லவ் டுடே’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார். அனைத்து வயதினரும் குடும்பத் துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின் றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் டிரைலரும் அமைந்துள்ளது.

இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

‘லவ் டுடே’ படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

“இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுது போக்கு அம்சங்களோடு பார்வை யாளர்களை ‘லவ் டுடே’ ஈர்க்கும்,” என்று படக்குழு கூறுகிறது. ‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப் பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள ‘லவ் டுடே’ படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள் ளார். அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தின் கிரேயிட்டிவ் தயாரிப்பாளார் ஆவார்.

Related posts

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Jai Chandran

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல் ரீலீஸ் தேதி அறிவிப்பு

Jai Chandran

முதன்முறையாக டைம் லூப் பாணி படம் ஜாங்கோ: இன்று பாடல் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend