Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அப்துல் ரகுமான் கவிதைப்போட்டி அறிவித்த லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநர் லிங்குசாமி அறிவித்த கவிதைப்போட்டி !

தமிழின் கவிதை உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் மீதான அன்பில் அவரது பெயரில், 1 லட்சம் ரூபாய் பரிசுடன் மிகப்பிரமாண்டமான கவிதை போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார், இயக்குநர் லிங்குசாமி.

தமிழ் கவிதை, இலக்கிய உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். மறைந்த கவிஞரின் மேல் தீவிர பற்றுகொண்ட இயக்குநர் லிக்குசாமி அவரின் பெயரில் ஹைக்கூ கவிதை போட்டி ஒன்றை, ஆர் சிவக்குமார் அவர்களுடன் இணைந்து அறிவித்துள்ளார். இப்போட்டியில் வயது வித்தியாசமின்றி எவரும் கலந்துகொள்ளலாம். மூன்று வரிகள் மட்டும் கொண்ட, இரண்டு ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும், கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் தீர்ப்பின் படி 1 லட்சம் பரிசு வழங்க்கப்படவுள்ளது.

இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கூறுகையில்
என் வாழ்வில் இதனை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான் அய்யா மீது நான் கொண்ட பற்று மற்றும் ஹைக்கூ மீது நான் கொண்ட காதல் தான் இந்த போட்டியை நடத்த காரணம். நீங்கள் எல்லோரும் இதில் பங்கேற்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கவிதைகள் kavikohaikupotti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும், போட்டி முடிவுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்படும்.

Related posts

பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்!

Jai Chandran

1st day of July. 1st single from KuruthiAattam..

Jai Chandran

“உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் ” கமல்ஹாசன் சூடான பதிலடி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend