சீனியர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்1966ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்’ படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். தொடர்ந்து, எதிரிகள் ஜாக்கிரதை, முத்து சிற்பி, தரிசனம், தங்க கோபுரம், காயத்ரி போன்ற படங்கள்மே லும் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, நெற்றிக்கண், கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன், போன்ற படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்கள்ள உள்ளிட்ட 1500 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக ஜூடோ ரத்னம் பணியாற்றி யுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். 92 வயதான இவர் வயது மூப்பு காரணமாக இன்று குடியாத்தத்தில் காலமானார்.
ஜூடோ ரத்னம் 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். ஜூடோ ரத்னம் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு ஸ்டண்ட் யூனியனில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.