Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது..நாளை முதல் தியேட்டரில் ரிலீஸ்..

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை வழங்கப்பட்டது.

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் டிசம்பர் 4ம்தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Related posts

“பிளாக் விடோ” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Jai Chandran

Udayanithi wishes karthi, Producer Lakshmankumar

Jai Chandran

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை: கே.டி.குஞ்சுமோன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend