சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் பத்தாம் தேதிக்கு ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப் பட்டினத்தில் நடந்து வந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சென்ற மாதம் 28ம் தேதி சென்னை திரும்பினார்
விரைவில் வேட்டையன் ரிலீசுகாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்துக்கொண்டி ருக்கும் நிலையில் ரஜினி காந்த்துக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் , லேசான நெஞ்சுவலியால் அவதிப்பட்டார் . உடனடி யாக அவரை சென்னை யில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு அடி வயிறு வீக்கம், லேசான நெஞ்சு மற்றும் முதுகு வலி முதுகுவலி போன்ற பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.. சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
ரஜினிகாந்துக்கு நெஞ்சுவலி இருப்பதால் அவருக்கு இதய குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதற்காக அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை அவருக்கு அளிக்கப் பட்டது. 70 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இத்தகைய அதிநவீன சிகிச்சை அளிக்கப்படு வதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக் கிறthu.. வீட்டில் அவர் இரண்டு அல்லது மூன்று வார காலம் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Mr. Rajinikanth was admitted to Apollo Hospitals, Greams Road, on 30th September 2024. He had a swelling in the main blood vessel leaving his heart (Aorta), which was treated by a non surgical, transcatheter method. Senior Interventional Cardiologist Dr. Sai Satish placed a stent in the aorta completely sealing off the swelling (Endovascular Repair). We would like to let his well-wishers and fans know that the procedure went, as planned. Mr. Rajinikanth is stable and is doing well. He should be home in two days.
ரஜினிகாந்த் ( செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை கிரீன் சாலையில் உள்ள மாப்பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதயத்தில் இருந்து செல்லும் ஒரு ரத்த நாளத்தில் வீக்கம் காணப்பட்டது.. அதற்கான சிகிச்சையை அறுவை சிகிச்சை இன்றி சீனியர் இதய நோய் டாக்டர் டாக்டர் சாய் சதீஷ் ஸ்டென்ட் சிகிச்சை மூலம் அளித்தார். அது வெற்றிகரமாக செயல்பட்டது. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு வீடு திரும்புவார்)