Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் (ஆங்கில பட விமர்சனம்)

படம் : ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

நடிப்பு: டாம் ஹோலண்ட், செண்டயா, பெண்டிக்ட் கம்பெர்பேட்ச்

தயாரிப்பு: கெவின் ப்ஜி. எமி அஸ்கல்

இசை: மைக்கேல் கிளாச்சினோ

ஒளிப்பதிவு: மவ்ரோ பியோர்

இயக்கம்: ஜான் வாட்ஸ்

 

ஸ்பைடர் மேன் உலமெங்கும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி நேசிக்கும் கதாபாத்திரம். தற்போது வெளியாகி இருப்பது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இது கடந்தமுறை வெளியான ஸ்பைடர் மேன் ஃபார் ப்ரம் ஹோம் படத்தின் தொடர்ச்சி என்று சொல்லலாம்.

ஸ்பைடர் மேன் பீட்டர் பார்க்கர்  சாகசங்கள் செய்யும் அதிசய மனிதர் என்று எல்லோருக்கும் தெரிய வருவதால் அவருக்கும் அவரது நண்பருகளுக்கும்  சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ஸ்பைடர்  மேன் மற்றும் நண்பர்களுக்கு யுனிவர்சிட்டியில் படிக்க அனுமதி மறுக்கப்படு கிறது. இதனால் அப்செட் ஆகும் பீட்டர் பார்க்கர் தன்னை உலக மக்கள் மறக்க வழி தேடுகிறான். அதற்காக பிரபஞ்சங்களை கைஅளவே உள்ள பெட்டிக்குள் வைத்திருக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறான். முதலில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அவர் பின்னர் சம்மதிக்கிறார். இந்நிலையில் பிரபஞ்ச பெட்டி திறக்கும் தருவாயில் வெவ்வேறு பிரபஞ்சங்களிலிருந்து வில்லன்கள் இங்கு வந்து சேர்கின்றனர். அதேபோல் வேறு பிரபஞ்சத்திலிருக்கும் இரண்டு ஸ்பைடர் மேன்களும் வருகின்றனர். இதனால் குழப்பம் அதிகரிக்கிறது. வேற்றுகிரக வில்லன்களை சிறை பிடிக்கும் ஸ்பைடர்மேன் அவர்களை அடைத்து வைக்கிறான். இந்நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி பீட்டர் பார்க்கரை அழிக்க துணிகின்றனர். இந்த போராட்டத்தில் வேற்று கிரகத்திலிருந்து வந்த 2 பைடர்மேன்களும் வில்லன்களை அழிக்கும் போரில் பங்கேற்கின்றனர்.  நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இவர்களுக்கு இடையே நடக்கும் போரில் வென்றது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
ஸ்பைடர்மேன் படத்தில் என்னவெல்லாம் இதுவரை காட்டப்பட்டதோ அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இப்ப்டத்தில் வரும் பிரமாண்டங்கள் அவென்சர்ஸ் காட்சிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது.

ஆக்டோபஸ் மனிதன், பல்லி மனிதன், மின்சார மனிதன் என வில்லன்கள் பட்டியல் நீள்கிறது. இவர்கள் காட்டும் சக்தி பிரமிக்க வைக்கிறது. இவர்களுக்கும் 3 ஸ்பைடர்மேன் களுக்கும் இடையை நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இடியாய் முழங்குகிறது.
திடீரென்று வரும் பழைய ஸ்பைடர் மேன் நடிகரின் என்ட்ரியின்போது அரங்கம் கூக்குரலால் அதிர்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகள், வி எப் எக்ஸ் காட்சிகள் என பிரமாண்டம் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. 3டி வடிவில் இப்படம் காணக் கிடைப்பது சிறப்பு.

இயக்குனர் ஜான் வாட்ஸ் முந்தைய படங்களிலிருந்து ஸ்பைடர் மேன் ஆக்‌ஷன் காட்சிகளை மாற்றி அமைத்து சுவரஸ்யத்தையும் பிரமிப்பைபும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் – ஹாலிவுட் பிரியர்களுக்கு மற்றொரு ஆக்‌ஷன் விருந்து.

Related posts

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு

Jai Chandran

பிரசாந்த் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கார்த்திக்..

Jai Chandran

அண்ணத்த ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend