சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.
சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை. மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் கடைசி எச்சரிக்கை. 23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் வெளியிட, முன்னணி மற்றும் முன்னோடித் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு டீசரை வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் ட்ரைலரை இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளருமான சீமான் வெளியிட்டார். பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் வெளியிட்டனர். மேலும் இப்படத்தை பார்த்து நடிகர் ஆரி அர்ஜுனன், சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற சண்டை இயக்குனர் ஜாகுவார் தங்கம், ஹீலர் பாஸ்கர் மற்றும் இசையமைப்பாளர் தாஜ் நூர் படத்தை வெகுவாக பாராட்டி வாழ்த்தியுள்ளனர் .
இப்போது படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார். இத்தனை பிரபலங்கள் மொத்த மாக பாராட்டியது கடைசி எச்சரிக்கை குறும்படத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரமாகும்.
மேலும், 2020ம் ஆண்டு நடந்த கிளப்பி மினி மூவி ஃபெஸ்டிவலில் சிறந்த படத்துக்கான விருது, செய்ஹர் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக் கான விருது, கோல்டன் ஸ்பேரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உள்பட மொத்தம் 6 விருதுகளை கடைசி எச்சரிக்கை படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கடைசி எச்சரிக்கை
அரவிந்தன் வி என்டர்டெயின்மெண்ட் வ. சீனிவாசன் தயாரிக்கிறார். எழுதி இயக்கியுள்ளாட் சுகுமார் கணேசன்.. பாடல்கள் சுகுமார் கணேசன். இசை ஏஐஎஸ் நவ்ஃபால் ராஜா. ஒளிப்பதிவு வி சந்திரசேகர். படத்தொகுப்பு தீபக். விஜய் சங்கர், எம். கோடீஸ்வரன். ஸ்டுடியோ நாக் ஸ்டுடியோ. மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர்.