Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சினம்கொள் (பட விமர்சனம்)

படம்: சினம்கொள்

நடிப்பு: அரவிந்தன் சிவஞானம், நந்தினி டெரி, லீலாவதி, பிரேம், தீபச் செல்வன், , தனஞ்ஜெயன், பாலா. மதுமிதா, பேபி  டென்சிகா

தயாரிப்பு: காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

ஒளிப்பதிவு: எம்.ஆர்.பழனிகுமார்

இயக்கம்: ரஞ்சித் ஜோசப்

ரிலீஸ்:  Eelam play  (OTT)

பி ஆர் ஒ: மணவை புவன்

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின் அங்குள்ள தமிழர்களின் நிலையை விளக்கும் படமாக உருவாகி இருக்கிறது சினம் கொள்.

இலங்கை வாழ் தமிழர் ரஞ்சித் ஜோசப் இப்படத்தை இயக்கி இருப்பதால் அங்குள்ள நிலைமையை தெளிவாக சொல்ல முடிந்திருக்கிறது.

இலங்கை சிறையில் கைதியாக பல வருடங்க ள் அடைபட்டு கிடந்து விடுதலையாகி வெளியில் வருகிறார் அரவிந்தன் சிவஞானம். சொந்த ஊருக்கு சென்று தன் வாழ்ந்த பூர்வீக இடம், மனைவி, மகளை தேடுகிறார். பூர்வீக இடத்தை இலங்கை ராணுவம் கைவசப் படுத்தி இருந்த நிலையில் மனைவ, மகள் என்னவென்று தெரியாமல் திணறுகிறார் அர்விந்தன். பல இடங்களில் தேடித் திரியும் அவருக்கு போராளி நண்பர்கள் உதவி செய்கின்றனர். அவர்கள் உதவி யுடன் மனைவி, மகளை கண்டுபிடிக் கிறார். குடும்பத்தோடு சந்தோஷமக வாழ்ந்தால் போதும் என்ற நிறைவுடன் அவர்களுடன் இணைகிறார். இந்நிலையில் அரவிந்தனை பெண் கடத்தல் வழக்கு ஒன்றில் போலீஸ் தேடுகிறது. மீண்டும் அவர்களிடம் கிடைத்தால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடையும் அரவிந்தன் தானே அந்த பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகி றார். அவரால் அதனை செய்ய முடிந்ததா? அல்லது சட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்கிறாரா என்பதை படம் விளக்குகிறது.

சினம் கொள் என்ற டைட்டிலே படத்தின் கருவை உணர்த்துவதாக அமைந்திருக் கிறது.
இலங்கையில் இறுதிபோர் முடிந்த பிறகு அங்கு தமிழர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா?அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்நாட்டு அரசாங்கம் செய்து தருகிறதா என்ற பல சந்தேகங்கள் உலக தமிழர்கள் மனதில் கேள்விகளாக தொக்கி நிற்கின்றன. அதற்கெல்லாம் இப்படம் விடை சொல்கிறது/

தமிழர்கள் தங்கள் வாழ்விடம் வாழ்வா தாரம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் அவலத்தை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் ரத்தக்கண்ணீர் வரவழைக்கிறது.
சிறையிலிருந்து வெளியில் வந்து மனைவி மகளை தேடுபவராக அரவிந்தன் நடித்திருக்கிறார். அவரது செயல் எதிலும் நடிப்பை காணமுடியவில்லை மாறாக நிஜத்தின் வலியையும், கஷ்டத்தின் கொடூரத்தையும் காண முடிகிறது. எதர்த்தமான நடிப்பு என்று அவ்வப்போது விமர்சனங்களில் ஒர் வார்த்தை இடம் பெறும் அதற்கு உண்மையான பொருள் என்றால் அரவிந்தன் சிவஞானத்தை காட்டலாம்.

சினம் குறைந்து சிறைப் பறவையாக வெளியில் வரும் அரவிந்தன் தன்னை சுற்றி ஏதோ சதி வலை விரிக்கப்படுகிறது என்பதை அறிந்தவுடன் மீண்டும் சினத் துடன் கூடிய போராளி குணத்தை வெளிக் கொண்டுவரும்போது ஆக்ரோஷத்துக் குள்ளாக்குகிறார்.

நர்வினி டெரி அரவிந்தனின் மனைவி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். வெளி நாட்டு தமிழராக நடித்திருக்கும் தனஞ் ஜெயன் அற்புத நடிப்பால் கவர்கிறார். லீலாவதி, தீபச் செல்வன், பாலா என படத்தில் உலா வரும் அத்தனை பாத்திரங் களும் உயிர்ப்புடன் நடித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி பகுதியில் தொடங்கும் காட்சிகள் போர் நடந்த பகுதிகளின் அவலத்தை உள்ளடக்கிய அசல் பதிவினை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம் ஆர்.பழனிகுமார்.

எம்.ஆர்.ரகுநந்தன் இசை காட்சிகளை ஓவர் டோஸ் செய்யாமல் நடைபோட்டிருக்கிறது.

இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

சினம் கொள் – கோபத்தில் கண்கள் சிவக்கும்

.

Related posts

Prasanth Varma’s JAI HANUMAN Starring Rishab Shetty..

Jai Chandran

KodiyilOruvan – BLOCKBUSTER HIT

Jai Chandran

ஆதித்ய வர்மா விமர்சனம்

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend