வைகாசி பொறந்தாச்சி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தவர் பிரசாந்த். படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தபோதும் ’என் வழி தனி வழி’ என்று நடித்துக் கொண்டிருக் கிறார். இளம் இயக்குனர்கள் முதல் பிரமாண்ட இயக்குனர்கள் மணிரத்னம் ஷங்கர், ஆர்.கே.செல்வமணி வரை நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இன்றைக்கும் இளமை துடிப்புடனும் இளஞ்சிடுக்களை கவரும் வசிகரத்துடனும் பிரசாந்த் இருக்கிறார். அதை நிரூபிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் தினமான இன்று சிவப்பு நிற கோட் அணிந்து கூலிங்கிளாஸ் மினுமினுக்க அனைத்து ரசிகர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லும் விதமாக இசை மீட்டி வீடியோவாக வெளியிட்டு அசத்தி இருக்கிறார். இது நெட்டில் வைரலாகி வருகிறது.
வரும் 2021 ஆண்டில் வெற்றி படத்தை தரும் முனைபுடன் கள்ம் இறங்கி இருக்மும் பிரசாந்த், ஜே ஜே ஃப்ரட்ரிக் இயக்கும் அந்தாதுன் இந்தி பட தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். 6 வெற்றி படங்களை இணைந்து அளித்த ஜோடி மீண்டும் இணைகிறது.
முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். தியாகராஜன் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.