Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிம்பு பாடிய “பெரியார்” பாடல் 4வது ஆண்டு கொண்டாட்டம்

தீபன் பூபதி இயக்கத்தில் வெளி யான ‘பெரியார் குத்து’ சென்சேஷனலான ஹிட் பாடலாக மாறியது. இந்தப் பாடல் உருவான விதம், சந்தித்த சவால்கள், இதன் வெற்றி கொடுத்த மகிழ்ச்சி ஆகியவற்றை தீபன் இதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெரியாரின் பிறந்தநாளில் ஆன்மாவைத் தூண்டும் பாடலை வெளியிடும் நோக்கத்துடன், தீபன் பூபதி இயக்கத்தில், இசைய மைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க, கார்க்கி எழுச் சியூட்டும் இந்த ‘பெரியார் குத்து’ பாடல் வரிகளை எழுதினார்.

பாடலின் எழுச்சியூட்டும் வரிகள் பெரியாரின் அபிமானிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என குழு நம்பிக்கை வைத்திருந்தது. தீபன் மேலும் கூறுகையில், “பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களையும் ஈர்க்கும் படியாக இருந்தன. மேலும், இது பெரியாருக்கு எங்கள் தரப்பில் இருந்து சிறந்த அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். பாடல் கேட்டு அன்பும் ஆதரவும் கொடுத்த ஒவ்வொரு வருக்கும் நன்றி” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்ட தாவது, “எனது நீண்ட கால நண்பரான எஸ்.டி.ஆர் ஒரு நாள் எதேச்சையாக ஸ்டுடியோவுக்கு வந்தபோது, இந்தப் பாடல் வரிகளுக்கு தனது பாராட்டை வெளிப்படுத்தினார். மேலும், பாடலைத் தானே பாடுவது மட்டுமல்லாமல் வீடியோவிலும் வருகிறேன் என உறுதி அளித்தார். அது பாடலுக்கு மேலும் வலுவூட்டியது” என்றார்.

இந்த பாடல் உள்நாட்டு பார்வையா ளர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் தமிழ்ச் சங்கங்களில் கிடத்த பாராட்டு களும் விருதுகளும் இந்தப் பாடல் உலகளாவிய பார்வையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய தாக்கத் துக்கு சான்றாக நிற்கின்றன.

‘பெரியார் குத்து’ பாடலை இன்றும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு தீபன் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியாக தீபன் கூறுகையில், “எதிர்காலத்தில் பெரியாருக்கு அர்ப்பணிக்க இன்னும் ஒரு பாடலை உருவாக்க நான் திட்டமிடுவேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி” என்று கூறினார்.

Related posts

Action packed trailer of PrabhuDeva’s Theal

Jai Chandran

Warner Music India acqure majority stake in Divo

Jai Chandran

Anbulla Gilli have found immense response instantly.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend