Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிலம்பரசன் டி.ஆர். மெகா ஹிட்டடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டலில் ரீ ரிலீஸ்

சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் மெகா ஹிட்டடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!

சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்!

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’

2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!

‘மன்மதன்’ சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அத்தனையும் தாறுமாறான வரவேற்பு பெற்ற படம், சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.

மன்மதன் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் டி.ஆர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கிறது!

Related posts

நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்

Jai Chandran

Bachelor Sneak peek #1

Jai Chandran

“மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend