திரையுலகினரின்நாளை எஸ் பிபி உடல் குணமாக கூட்டு பிரார்த்தனையில் ரசிகர்களும் பங்கேற்க நடிகர் சிம்பு வேண்டுகோள் விட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
உயிரினும் மேலான ரசிகர் களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.
இனிமை என்ற வார்த் தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டா லே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த் திய பாடல் ஆசான் அவர்.
இன்று மருத்துவமனை யிலிருந்து மீண்டு வரும் வதற்காய் காத்திருக்கி றோம். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும்.
எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவர் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.
லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப் பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கி றேன்.
வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்…
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.