Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

400 பேருக்கு சிம்பு தலா ஒரு கிராம் தங்கம் தீபாவளி பரிசு

நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல்
மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது.

சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.
மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related posts

Emotional Video Song of Uyire From RRR

Jai Chandran

உதயம், கீதாஞ்சலி போல் இரட்சன் வரவேற்பு பெறும்.: நாகார்ஜூனா

Jai Chandran

Udhayanidhi Stalin starrer “Article 15” remake shoot with a tribute to actor Vivek

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend