Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் வரலாறு காணாத வெற்றி

முதல் உரையில் மக்கள் உலக நாடுகளை கவர்ந்தார்

வாஷிங்டன் நவ, 8.

உலக நாடுகளே உற்று நோக்கி வந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. மக்கள் ஆதரவுடன் ஜோ பிடன் அதிபராக வரலாறு காணாத வெற்றி பெற்றார். டிரம்ப் தோல்வியை தழுவினார்.
பணக்கார நாடான அமெரிக்கா வின் பொருளாதாரம் மற்றும் ஆட்சிமுறை உலக நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத் துண்டு. டிரம்ப் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை எதிர்த்து போட்டி யிட்டார். அதிபருக்கான தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. 270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப் பற்றி முன்னிலையில் இருந் தார், குடியரசு கட்சி வேட்பா ளர் டிரம்ப் 213 பெற்று பின்தங்கி இருந்த நிலையில் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இருந்து டொனால்டு டிரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், தான் வெற்றி பெற்ற தாக அறிவித்து தேர்தலை அமெரிக்க மக்கள் மீதான மோசடி, அனைத்து வாக்கு எண்ணிக்கையையும் உடனடியாக நிறுத்த உச்சநீதி மன்றத்திற்கு செல்வதாக கூறினார். இதனால் அமெரிக் காவில் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பை வெளியேறுமாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். முன்னிலை வகித்து வந்த பீடன் நள்ளிரவுக்குப் பிறகு டிவியில் தோன்றி அமெரிக் கர்களை பொறுமையாக இருக்கச் சொன்னதுடன், தான் வெற்றியாளராக இருப்பதாகக் கூறினார். இதற்கிடையில் டிரம்ப் கூறும் பொய்களை இனி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று அனைத்து டிவி சேனல்களும் அவரது உரை நிறுத்திவிட்டன
தொடக்கம் முதலே முன்னி லை வகித்த ஜோ பிடன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள் ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல் வாக்குகள் பெற வேண்டும்.
இன்று காலை 7 மணியளவில் ( இந்திய நேரப்படி) ஜோ பீடன் 290 தேர்தல் வெற்றி பெற்றார். டிரம்ப் 214-தேர்தல் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரி வித்து வருகின்றார்கள். அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
அமெரிக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நாடு களுக்கு நம்பிக்கை யூட்டும் வெற்றி உரை நிகழ்த்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்களும் அநீதிக்கு எதிராக திரண்டுள்ளனர். இதுதான் நாம் இழந்த அமெரிக்காவை மீட்டெடுப்ப தற்கான நேரம்.
மக்கள் என் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைக் நிச்சயம் காப்பாற்றுவேன். இந்த மகத்தான வெற்றி அளித் ததன் மூலம் நாட்டு மக்கள் தங்கள் குரலை ஒருமித்து ஒலித்திருக்கின்றனர். அமெரிக்காவின் மரியாதை யை உலக அரங்கில் உயர்த்த உழைப்போம். மக்களுக்கான சிறந்த நாள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சமத்துவம், சம உரிமைக்காக நாம் 4 ஆண்டுகளாக போராடி வந்தோம். கோவிட் 19 உயிர்க் கொல்லி நோய் காலத்திலும் கட்சிக்காக வெற்றிக்காக உழைத்தவர் களுக்கு நன்றி.
ஆட்சி பொறுப்பை ஏற்ற வுடன் திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக் கும். கோவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கு முன்னுரிமை தரப்படும்
அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார் கள். வாய்ப்புகள் அனைவருக் கும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொருவரின் பாதுகாப்பும் என்னுடைய இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் அனை வரும் ஒன்றிணைந்து ஆக்கப் பூர்வமாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன்.


ஒபாமா ஆட்சிக்கு வந்தபோது
நம்மால் முடியும் என்ற முழக்கத்துடன் வந்தார். அவருடன்தான் நான் இருந் தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்கு மான அதிபராக இருப்பேன்.
இவ்வாறு புதிய அதிபராக வெற்றி பெற்ற ஜோ பிடன் தனது வெற்றி உரையில் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த உரை அனைத்து தரப்பு மக்கலுக்கும், உலக நாடு களுக்கும் நம்பிக்கையை ஊட்டும் விதாமாக அமைந்தி ருப்பதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஜோ பிடன் வெற்றியை அமெரிக்க மக்கள் சாலைக்கு வந்து மகிழ்ச்சியாக கொண் டாடி வருகின்றனர்.

Related posts

கடுக்கா (பட விமர்சனம்)

Jai Chandran

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

Jai Chandran

Shyam Singha Roy Tamil Trailer Launch Event –

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend