Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பிடித்த பாம்பு? வன அதிகாரி விளக்கம்..

சமீபநாட்களில் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது. இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, வன இலாகா அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசனிடம் நேரில் சென்று, சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தில் ரப்பர் பாம்புவை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் வன அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.


இது தொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறியதாவது:
பொதுவாக விலங்கினங்களை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ‘ஈஸ்வர்’ படக்குழுவினர், ரப்பர் பாம்பை வைத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் ( CG ) எப்படியெல்லாம் சினிமாடிக் டிரிக் செய்தோம் என்று விளக்கினார்கள். அதை பார்த்த பின்பு தான் அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என்று புரிந்தது… உறுதியானது. இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை

இவ்வாறு வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறினார்.

இப்படத்தை, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ‘D’ கம்பெனி சார்பில் K.V.துரை தயாரித்துக் கொடுக்கிறார்.

Related posts

Malica Ravikumar launches Life Coaching Company for women

Jai Chandran

மைல்கல் நிர்ணயித்த சிவாஜி: கமல் புகழாரம்

Jai Chandran

’பூமி படத்தில் ஜெயம் ரவி போலவே என் பாத்திரமும் கவனத்தை ஈர்க்கும்’ நிதி அகர்வால்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend