Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் ‘சுபிஸ்டா மாவா’

மற்றும் ‘ஜூலாயின்’ என்ற பெயரில் தெலுங்கில் மறு உருவாக்கத்தில் வெளியானது. கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி, பாரம்பரிய பாத்திரமாக இருந்தாலும் சரி, அம்ரின் மிகவும் பொருந்தி விடுகிறார். ஆகையால், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அம்ரின் தனது இந்தி திரைப்படங்கள் நிறைவடைவதற்கு முன்பே கிளவுட் நைன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்தியில் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமான கதாநாயகியாக மாறுவதே அம்ரின் குறிக்கோளாக வைத்துள்ளார். ரேகா, ஹேமமலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாகீதா ரெஹ்மான், தபு போன்ற கதாநாயகிகள் தென்னிந்திய சினிமா மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பாலிவுட்டில் நுழைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், நட்சத்திர நாயகிகள் என்ற அந்தஸ்தோடு பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. தற்போது, இதற்கு மாறாக ஒரு தென்னிந்தியாவை சேர்ந்த பெண் பாலிவுட்டில் நுழைந்துவிட்டார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘புஸ்தகாம்லோ கொன்னி பேஜெலு காணவில்லை’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் சஜித் குரேஷியின் மகள், ராயல் பிலிம் விநியோகஸ்தர் உரிமையாளர் எம் ஐ குரேஷியின் பேத்தி அம்ரின் குரேஷி இரண்டு பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களான ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாய்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் அம்ரின் குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். ‘பேட் பாய்’ படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி ‘சுபிஸ்டா மாவா’வின் மறு உருவாக்கத்தை இயக்குகிறார். சஜித் குரேஷி தனது இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். கோடைகால சிறப்பு படமாக இந்த படத்தை வெளியிட

திட்டமிட்டுள்ளனர். ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், நட்சத்திர இயக்குநர் திரிவிக்ரமின் ‘ஜூலாய்’ டோனி டிசோசாவின் இயக்கத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் ஆரம்பமாகும். கதாநாயகிகள் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் பருவத்தில், தெற்கிலிருந்து செல்லும் அம்ரின் குரேஷி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். விரைவில் அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பரபரப்பாகி விடுவார் என்று நம்புகிறோம். அம்ரின் குரேஷிக்கு வாழ்த்துக்கள்.

Related posts

MUFASA: THE LION KING TAMIL VOICE TALENTS PRESS MEET

Jai Chandran

அருண் விஜய் 3 நாள் புரமோஷன் நிகழ்வில் ரசிகர்கள் உற்சாகம்

Jai Chandran

நடிகர் சூர்யா திரைப்படத்துக்கு மிரட்டலா? மார்க்சிய கம்யூ கண்டனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend