Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அங்கமுத்து சண்முகம் இறுதி ஊர்வலம்: நாளை படப்பிடிப்புக்கள் ரத்து

திரைப்பட ஆர்ட் டைரக்டர் அம்ங்கமுத்து சண்முகம் இன்று மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் நாளை சென்னையில் நடக்கிறது. இதையொட்டி படப்பிடிப்புக்கள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது:

40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் வலம் வந்தவரும், கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரும், பெப்சியில் 3வது முறையாக செயலாளராக தேர்வாகி செயல்பட்டு வந்தவரும்.தான் பணிபுரிந்த தயாரிப்பாளர்களிடம் மட்டுமல்ல அனைத்து தயாரிப்பாளர்களிடமும் இன்முகத்துடன் பழகிவந்த அங்கமுத்துவின் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பாகும்.

நாளை 28.06.2021 அன்று அவரது இறுதி ஊர்வலமும் நல்லடக்கமும் நடைபெற இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில் நாளை (28.06.2021) பெப்சியின் வேண்டுகோளுக்கிணங்க திங்கள்கிழமை சென்னையில் படப்பிடிப்புகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”.

இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம் தான் #விருமன்- டைரக்டர் முத்தையா

Jai Chandran

துல்கர் சல்மான் வெளியிட்ட ‘லக்கி பாஸ்கர்’ பட டைட்டில் ட்ராக்

Jai Chandran

பிரஜன் – அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend