Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கை பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி

பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடரின் உலகளாவிய பிரீமியர் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே பார்வையாளர்களிடம் அது குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது. தொடரில் நடித்த திறமையான நடிகர்கள் படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களிம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகின்றனர். முன்னணி நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், ஸ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக நடிக்கிறார், ஊட்டி நகரத்தில் ‘தி சுழல் கர்ஜனை’ தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடல் பயிற்சியை வீடியோவில் காணலாம். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது “This is what Regina does when she’s off duty #suzhalonprime #Suzhal”. என்பதாகும்

https://instagram.com/stories/sriya_reddy/2859643251661875192?utm_source=ig_story_item_share&igshid=YmMyMTA2M2Y=

நடிகையாகவும்,உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஷ்ரேயா ரெட்டி, இந்த தீவிரமான க்ரைம்-த்ரில்லரின் படபிடிப்பின் போது திரைக்கு பின்னர் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறார்.

“ஒரு தீவிரமான காட்சியை படமாக்கும் போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை., காபி இல்லை, டீ இல்லை, இசை கூட எனக்கு உதவவில்லை. அதனால் குளிர் தாக்கும் ஊட்டியில் மீண்டும் என் கதாபாத்திரத்திற்குள்ளேயே செல்ல நான் முடிவு செய்தேன். இதுதான் ஒரே வழி என்று எனக்கு தோன்றியது. “இந்த வேடிக்கையான வீடியோவில், இன்ஸ்பெக்டர் சக்கரையாக நடிக்கும் சக நடிகர் கதிருடன் ஸ்ரேயாவின் தோழமையை நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் இருவரையும் வலைதொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் !

சுழல் – தி வோர்டெக்ஸ்: புலனாய்வு தொடர். பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்திரி ஆகியோரின் எழுத்து மற்றும் தயாரிப்பில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் போது, கண்டுபிடிக்கபடும் ஆச்சர்யம் நிறைந்த நிகழ்வுகளை தொகுத்து 8 எபிசோடாக உருவாக்கியுள்ளனர் படகுழுவினர். பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தொடரான, சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற தமிழ் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம், சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபின்னிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய்,உக்ரேனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் சப்டைட்டில்களுடன் கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17 முதல் சுழல் – தி வோர்டெக்ஸைப் பார்க்கலாம்.

Related posts

தேர்தல்: இரவு நேரத்தில் நாடகங்கள் நடத்தலாமா

Jai Chandran

Chiranjeevi153 Music Sittings Begin

Jai Chandran

Tom Hardy Stars in Venom

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend