படம்: ஷகீலா
நடிப்பு: ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி
தயாரிப்பு: ஷம்மி நன்வானி, சரவண பிரசாத்
ஒளிப்பதிவு: சந்தோஷ் ராய்
இசை: வீர் சமர்த்-மீட் ப்ரோஸ்
இயக்கம்: இந்திரஜித் லங்கேஷ்
ஷகீலா என்றால் மலையாளப் படங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அஞ்சரைக்குள்ள வண்டி, ஆட்டோ ராணி என பல படங்கள் ஷகீலாவின் கவர்ச்சிக்காக வசூலை குவித்த படங்களாக அப்போது இருந்தன. கவர்ச்சி நடிகை ஷகீலா வாழ்க்கையை மையாக வைத்து உருவாகி யுள்ள படம் ஷகீலா
உடன் பிறந்த ஐந்து தங்கைகள் இருக்க சிறு வயதிலேயே தந்தை இறந்துவிடுகிறார். குடும்பத்தை காப்பாற்ற சினிமாவில் ஜுனியர் நடிகை யாக சேர்கிறார். பிறகு அவர் கவர்ச்சி நடிகையாகி பிரபலம் ஆகிறார். அவரது படங்கள் வெளியானால் பெரிய ஹீரோ படங்களே மண்ணை கவ்விக் கொள்கிறது. அதைக்கண்டு பெரிய நடிகர் ஒருவர் கோபம் அடைகிறார். ஷகீலாவை திரையுலகை விட்டு துரத்த முயல்கிறார். சரியான சந்தர்ப்பம் பார்த்திருக்கும் அவர் , ஊரில் ஷகீலா படத் தால் பெண்கள் பலர் பலாத் காரம் செய்யப்படுகிறார்கள் என்று சர்சையை கிளப்பிவிட அதன்பிறகு ஷகீலா படத்துக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் ஷகீலா பட வாய்பில் லாமல் முடக்கப்படுகிறார். பின்னர் அவரது நிலைமை என்ன என்பதை படம் விளக்குகிறது.
இப்படத்தில் ஷகீலா கதா பாத்திரத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்திருக்கிறார். நிஜ ஷகிலா கொஞ்சம் பூசினார்போன்ற உடலுடன் தளதளவென்று இருப்பார் இந்த சினிமா ஷகீலா உயர மாக பளபளன்னு இருக்கிறார். உருவ ஒற்றுமை தான் பொருந்தவில்லையே தவிர மற்றபடி கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. கவர்ச்சிக் காகவே பாடல்கள் எடுத்தது போல் அவ்வளவு கிளாமர் உடைகளில் இளமையை தெறிக்கவிட்டு இளசுகளை பாடாய்படுத்தி இருக்கிறார் ரிச்சா.
ஷகீலா படத்தில் அவரது முகத்தை மட்டும் காட்டி விட்டு உடம்பு மற்றதையெல் லாம் காட்ட இன்னொரு நடிகையை பயன் படுத்திய ரகசியம் இந்த படத்தில் அம்பலமாகி இருக்கிறது. ஷகீலாவுக்கு டூப்பாக நடித்திருக்கும் எஸ்தர் கும்மென்று இருக்கிறார்.
ஷகிலாவை மற்றொரு நடிகை கன்னத்தில் அறையும் காட்சி படத்துக்காக வைக்கப்பட்டதா உண்மையா என்பது தெரிய வில்லை.
ஷகீலாவின் காதலாக ராஜீவ் பிள்ளை நடித்திருக்கிறார். ஷகீலாவின் பள்ளி நினைவு காட்சிகளில் இளமை பளிச் சிடுகிறது.
ஷகீலாவுக்கு வில்லனாக மலையாள பிரபல நடிகர் ஒருவரை குறிக்கும் வகையில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்திருக் கிறார். நேர்த்தியான நடிப்பால் யார் இந்த நடிகர் என உற்று கவனிக்க வைக்கிறார். இவருக்கும் ஷகீலாவுக்கும் இடையிலான மோதலாக திரைக்கதையை அமைத்து காட்சிகளை விறுவிறுப்பாக முயன்றிருக்கிறார்கள்.
படத்தில் ரிச்சா சத்தா, ஷகீலா ரேஞ்சுக்கு என்னவெல்லாம் காட்ட முடியுமோ அவ்வள வும் காட்டி இருக்கிறார். அதற்கு மேல் போயிருந்தால் சென்சார் கத்தரி விட்டு வைத் திருக்காது.
படத்தில் இசை முக்கிய இடம் பிடித்திருக்கிறது. வீர சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸ் இசை அமைத்துள்ளனர். அதேபோல் எல்லோராலும் பாராட்டு பெறுவது சந்தோஷ் ராயின் ஒளிப்பதிவு. எதை காட்டினா லும் பளிச்சென காட்டியிருக் கிறார்.
ஷகீலா படம் என்றதும் அதை நீலபடமாக்கி விடாமல் அவரது வாழ்க்கை படமாக வே காட்ட அதிகபட்சமாக முயன்றிருக்கிறார்.
ஷகீலா – இன்னொரு கவர்ச்சி விருந்து.