சினிமா ஆளுமைகள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும், Netflix நிறுவனத்தின் “நவரசா” ஆந்தாலஜி படத்திலிருந்து, அற்புதமான இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது Think Music நிறுவனம். இப்பாடல் 2021 ஜூலை 13 செவ்வாய் மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. “Bleeding Heart ( உசற பறந்த வா) ” எனும் உணர்வூர்வமான மென் மெலடி பாடலான, இப்பாடலுக்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். சௌந்தர ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சர்ஜூன் KM இயக்கியுள்ள, காதல் ரசத்தில் உருவாகியிருக்கும் “துணிந்த பின் ” படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
previous post