சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சசிகலா விடுதலை யானார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்ற அவர் குணம் அடைந்த பிறகு பெங்களுரில் ஒரு பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். ஓய்வு முடிந்து (நாளை பிரவரி 8ம் தேதி) சசிகலா சென்னை திரும்புகிறார். அவருக்கு தமிழக, கர்நாடக எல்லையில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக் கிறார். சென்னைக்குள் வந்த பிறகு அங்கும் 10 இடங்களில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சசிகலா சென்னை தியகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டிற்கு சென்று தங்குகிறார். அங்கு அவரை தொண்டர் களும் கட்சி தலைவர்களும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
சசிகலா தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ள தாக அமைச்சர்கள் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத் துக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப் பதுடன் பூட்டி வைக்கப்பட்டி ருக்கிறது.