Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எல் வி. பிரசாத் பிலிம் டிவி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆரி

எல் வி பிரசாத்  அகாடமியின் மாணவர்களுக்ஃபிலிம் & டிவிகு நடிப்பு பயிற்சி எடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன் ..

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்தார் இதில் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்..

அப்போது அவர் பேசுகையில்

எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் *நடிப்பு பயிற்சி* இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது..

இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான் நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள்

நாளைய நட்சத்திரங்களை இப்போது பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது

நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோசம் மிகப் பெரியது நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன்.

காலப்போக்கில் நான் நடிகனாக பிஸியாக மாறியதால் அதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன் இப்போது சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இவர்கள் தான் நாளைய நட்சத்திரங்கள்…

இப்போது சர்ப்பேட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரம் நடித்தவர் எனது மாணவன் அவரை திரையில் காணும்போது நான் அதிகம் சந்தோசப்பட்டேன்…

அப்படித்தான் இந்தக் அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும் நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர் பெற்றோர்களை விட நான் அதிகம் சந்தோசப்படுவேன் என்றார்..

மேலும்

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள்
ஒரு குருவா நான் மாணவர்களுக்கு சொல்றது என்னன்னா நேரத்தை சரியாக பயன்படுத்தனும், நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது நிறைய நேரங்கள் விரயமானது எனவே அவற்றை சரியாக பயன்படுத்த மாணவர்களை அறிவுறுத்தினேன்

இந்த நேரத்தில் நான் இனிது இனிது திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்கும் இயக்குனர் குகனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இனிது இனிது படத்தில் தான், நடிகனாக வாய்ப்பு தேடி அலைந்த என்னை நடிப்பு பயிற்சி எடுக்க நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் குகன் வாய்ப்பு அளித்தார்கள் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்

நடிப்பு என்பது என்னை பொருத்தவரை உங்களின் உள்ளுக்குள் இருந்து வெளிவருவது, அது படிப்பு போல மன பாடத்தால் பெற்றுவிட முடியாது அதேபோல் கடையில் கிடைக்கும் பொருட்கள் போல வாங்கி விட முடியாது..

உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் நடிகனை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த பயிற்சி வகுப்பு
இப்படியான பயிற்சி வகுப்பு எடுத்து ரொம்ப காலங்கள் ஆனாலும் இப்போது அதை மீண்டும் மற்றவர்களுக்கு கற்றுத் தருவதில் மிகப் பெரிய சந்தோஷம் இருக்கிறது என்றவர்
இப்படி ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பெடுக்க அழைத்த எல் வி பிரசாத் குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Related posts

ஹீரோ நிச்சயம் சூப்பர் ஹீரோவாகும்… ஜார்ஜ் சி வில்லியம்ஸ் பேச்சு

CCCinema

RRR New Release Date

Jai Chandran

சிபி க்கு ‘கபடதாரி’ படக்குழுவின் சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு! 

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend