Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் அரசு நடவடிக்கைகள் குறித்து சரத்குமார்

ஊரடங்கு அமல்படுத்துவதற்க்கு முன் அரசு எடுக்க வேண்டு நடவடிகைகள் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்  வெளியிட்டுள்ள அறீக்கை:

கொரோனா 2 –வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், இதில் இருந்து விடுபடுவதற்கு ஊரடங்கே தற்காலிக தீர்வாக இருக்க முடியும் என்பதால் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதும், அதற்கான திட்டங்கள் தீட்டுவதும், அதனை செயல்படுத்துவதும் நியாயமான, அவசியமான நடவடிக்கை தான். இருப்பினும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு முன்கூட்டியே கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

திட்டமிட்டு செயல்பட்டால் மக்களுக்கு பலனளிக்கும் என்பதால், தற்போதைய சூழலை நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு, பின்னர் சிறப்பாக செயல்பட வேண்டும். தற்போது பெரும்பாலான குடும்பங்கள் வீட்டுக்கடன், வாகனக்கடன், சொந்தநிதிக் கடன் என ஏதோ ஒரு கடனை பெற்று மாதத்தவணை செலுத்துவதை அனைவரும் அறிவார்கள். மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மாதத்தவணை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

வணிகர்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சலுகை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மருத்துவ துறை வாகனங்கள், முன்கள பணியாளர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் வரிவசூலிக்க தடைவிதிக்க வேண்டும்.

ஒரே நாட்டில் அரசு இரு நிலைப்பாடு எடுப்பது மக்களை குழப்பத்திலும், வேதனைக்கும் உள்ளாக்கும். உதாரணம் அரசு 50 சதவிகித அரசு பணியாளர்களுடன் இயங்க அனுமதித்துள்ளது. ஆனால், 100 சதவிகித பணியாளர்களுக்கும் ஊதியம் சென்றடையும்.

தனியாரில் 50 சதவிகித பணியாளர்கள் பணிக்கு சென்றால் மீதமிருக்கும் 50 சதவிகிதம் பேரின் ஊதியத்தை யார் கொடுப்பார்கள், ஊதிய தேவை பூர்த்தியாகாத போது, அவர்கள் ஒவ்வொரு நாட்களையும் பொருளாதாரமின்றி எப்படி கடப்பார்கள். ஏற்கெனவே கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியபடி, குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி ஒரு மாதம் மக்களை வீட்டில் இருக்கும்படி செய்து, கொரோனா பாதித்தவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு முழுவீச்சில் செயல்பட்டால் தற்போதைய 2-வது அலையில் இருந்து மீண்டு வர முடியும்.

அரசின் முழு ஊரடங்கை முழுமையாக வரவேற்கும் அதேசமயம், சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திட வேண்டும்

இவ்வாறு சரத்குமார் கூறி உ:ள்ளார்.

Related posts

Arya’s Oru #KuttiKadhai: HappyBirthdayGnanavelRaja

Jai Chandran

டெட்பூல் – வால்வரின் சூப்பர் ஆக்ஷ்ன் ஷூட்டிங்

Jai Chandran

Actor Srinish Thank Covid Vaccine camp Participants

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend