தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மழலையர் வகுப்புகளை (LKG, UKG) தொடர்ந்து நடத்த வேண்டும் என. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2381 அங்கன்வாடி மையங்களை, அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளி களில் LKG, UKG உள்ளிட்ட மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இனி சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அங்கன் வாடிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருப்பது ஏன் என்ற குழப்பம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு களை தொடர்ந்து நடத்துவதற்கு ஆசிரியர்கள் நியமனம், அல்லது அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்தும் பின்னடைவு காரணங்கள் வேறு ஏதேனும் இருப்பின் அதனை மக்களிடம் அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் கல்வி நலனுக்காக அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் (LKG, UKG) வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியா ளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒருமித்த குரலில் தெரிவிப்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்து, நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவங்கிட வேண்டு மென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.