Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மழை வெள்ளம்: மக்களை இன்று சந்திக்கும் கமல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திக்கிறார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த பெருமழை மற்றும்  கரை கடந்த காற்றழுத்தத்

தாழ்வு மண்டலத்தால் பாதிப்படைந்த மக்களைக் காணவும், நிவாரணப் பணியில்  ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சித் தொண்டர்களோடு தன்னை இணைத்துக் கொள்ளவும்  நமது கட்சித் தலைவர் ‘நம்மவர்’ கமல் ஹாசன் இன்று (12.11.2021) காலை 11 மணியளவில் வேளச்சேரி யிலிருந்து புறப்பட்டு தி.நகர்  வழியாக சென்னை சென்ட்ரல் நிலையம் பாலம்  சத்திய மூர்த்தி நகர் வரை பயணிக்கிறார்.

மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், அவர்களின் குறைகளை அறிந்து அரசுக்குத் தெரிவித்து உதவிகள் பெற்றுத் தரவும் நம்மவர் நாளை வருகை தருகிறார்.

பயண விவரம் :

1)  11.00 AM – ராம் நகர் (வேளச்சேரி சென்னை சில்க்ஸ் எதிரில்).
2) 11.15 AM – அம்பேத்கர் நகர், வேளச்சேரி.
3) 12.00 AM – தாமஸ் ரோடு, (தி.நகர் போக் ரோடு அருகில்).
4) 1.00 P.M – சத்தியமூர்த்தி நகர் ( சென்னை சென்ட்ரல் பாலம் அருகில்)

இதனை மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது

Related posts

Lyca Productions acquires the overseas Rights of Captain Miller

Jai Chandran

Yaanai scales 100 Million streaming minutes!

Jai Chandran

Cinderella Public Open Talk

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend