Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் 103வது நினைவு தினம்..

தமிழ் நாடகத்தந்தை என அழைக்கப்படும் தவத்திரு ஶ்ரீலஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின் 103வது நினைவு தினத்தையொட்டி, இன்று (13.11.25) தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நடிகர் சங்க துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி லதா சேதுபதி, திரு.ஹேமச்சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி லலிதா குமாரி, திரு எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், திரு பழ.காந்தி, திரு.தாசரதி, திரு. அனந்த நாராயணன், நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாடகங்களை அரங்கேற்றியவர்.
எஸ்.ஜி.கிட்டப்பா, பி.கே.சண்முகம் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர்

புதுவையில் 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள் சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்தார்.

Related posts

Trailer launch event of Mugai

Jai Chandran

Divya’ could be the next captivating Investigative drama..

Jai Chandran

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’ படப்பிடிப்பில்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend