Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சலார் (பட விமர்சனம்)

படம்: சலார்

நடிப்பு: பிரபாஸ்,  பிருத்வி ராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரிராவ், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு, டினு ஆனந்த், ஸ்ரேயா ரெட்டி, ரமணா ராமச்சந்திரா ராஜு, தேவராஜ், மைம் கோபி மற்றும் பலர்

தயாரிப்பு: ஹோம் பாலா.பிலிம்ஸ்

இசை: ரவி பசுருர்

ஒளிப்பதிவு; பவன் கவுடா

இயக்கம்: பிரசாந்த் நீல்

பி ஆர் ஒ: யுவராஜ்

 

கே ஜி எஃப் வெற்றி படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் உடன் இணைந்து  உருவாக்கியிருக்கும் படம்  சலார் . ஒரு பிரமாண்ட இயக் குனர், பிரமாண்ட ஹீரோ, பிரமாண்ட பட நிறுவனம் இணைந் தால் எப்படிப்பட்ட பிரமாண்டம் உருவாகும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு சலார்.

பிரபாசுக்கும்,  பிருத்விராஜுக்கும் சிறுவயதில் ஏற்படும் நட்பு ஒரு சாம்ராஜ்யத்தை பிடிக்கும் நட்பாக உருவெடுக்கிறது. படத்தின் கதை என்று பார்த்தால் உலக வரைபடத் திலேயே இல்லாத  கான்சார்  தனி நாடாக இயங்குகிறது. அதன் அதிபதி ராஜமன்னார் (ஜெகபதி பாபு) தனக்கு .பின்னால் அரியணை ஏற தகுதியானவர்  வரதராஜமன்னார் (பிருத்வி ராஜ்) என முடிவு செய்கிறார்.  அதை  உடனிருக்கும் அமைச்சர்கள் ஏற்காமல் வெளிநாட்டு உதவி யுடன் படை திரட்டுகின்றனர் வரதராஜன் மட்டும் படை திரட்டாமல் தனது சிறுவயது நண்பன் சலாரை (பிரபாஸ்) அழைத்து வருகிறான். ஒற்றை  வீரன் சலார் எப்படி பெரும்படை யை தோற்கடிக்கிறான் என்பதற்கு ரத்தம் கொப்பளிக்க பதில் அளிக்கிறது  கிளைமாக்ஸ்.

படத்தில் நிறைய கிளைக்கதைகள் உள்ளதால் பிரதான அம்சத்தை. மட்டும் மேற்சொன்ன கதை விவரிக்கிறது.

பிரபாசுக்கு அழகான காஸ்டியூம் இல்லை,  அட்டகாசமான டான்ஸ் இல்லை, காதல் இல்லை, காதலியும் இல்லை ஆனால் படம் முழுக்க தன் பாத்திரத்தை  உற்று நோக்க வைக்க முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரமாகி இருக் கிறார்.

சிறு வயது தோற்றத்திலேயே கரன்ட் ஷாக் கொடுத்து பயில் வானை வீழ்த்த வைக்கும் முதல் காட்சியிலேயே பிரபாஸ் கதாபாத் திரத்துக்கான  துணிச்சல் எப்படிப் பட்டது என்பதை மிரட்டலுடன் உணர்த்துகிறார் இயக்குனர்.

ஸ்ருதி ஹாசனை. ரவுடி கூட்டம்  இழுத்துச் செல்வதைக் கண்டு கோபப்படும் பிரபாஸ் விரல்களை இறுக்க ஆனால் தாய் ஈஸ்வரி ராவ்க்கு செய்து தந்த  சத்தியத் தால் கோபத்தை அடக்கிக் கொண்டு  நிற்பதும்   அதைக் கண்டு தாய்  ஈஸ்வரி, “உன் சத்தியத்தை வாபஸ் தருகிறேன் அவளை காப்பாற்று” என்று சொல்லும் அடுத்த நொடி பிரபாசின் ஆக்ஷ்ன் ஆரவாரம்  ஆரம்பித்து விடுகிறது. அரங்கில் விசில்  சத்தம் பறக்கிறது

தனி ஆளாக பிருத்விராஜுக்காக பெரும் படையை எதிர் கொண்டு துவம்சம் செய்யும் பிரபாஸ் இரத்த  குளியலில் மிதக்கிறார்.

படம் பற்றி கண்ணை மூடிக்  கொண்டு சிந்தித்தால் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே திரும்ப திரும்ப  காட்சிகளாக ஓடுகிறது.  அம்மா சென்டிமெண்ட்டுக்கு ஈஸ்வரி ராவ், நட்பு சென்டிமென்ட்டுக்கு பிருத்வி ராஜ் என வரிசைப்படுத்தி இருக்கும் இயக்குனர் வில்லன் கூட்டத்தைத்தான் கணக்கில் லாமல் நிறுத்தி இருக்கிறார்.

இப்படி ஒரு ஊர் இருக்கு,  அங்கு இப்படியொரு  இன மோதல்  இருக்கு அதை வைத்து பான் இந்தியா படம் உருவாக்கலாம் என்று சிந்திக்க இயக்குனர் பிரசாந்த் நீல் ஒருவரால் மட்டுமே முடியும்.  அவர்தான் அதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

பிரதான பாத்திரங்களின் லேசான.அசைவுக்கு கூட இடி முழக்க இசையால் மிரள வைக் கிறார்  இசை அமைப்பாளர் ரவி பசுருர்.

ஒளிப்பதிவாளர் பவன் கவுடா வேறுவொரு.உலகத்துக்கு  ரசிகர் களை.அலெக்காக  தூக்கி சென்று விடுகிறார்.

படத்தின் 2ம் பாகத்துக்கும் முதல் பாக முடிவில் லீட் கொடுக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். கான்சார் அதிபதி பதவிக்கு வாரிசு பிரபாஸ் தான்  என்று 2ம் பாகத்துக்கான  இன்ட்  கொடுத்து அடுத்த ஆக்ஷன் களத்துக்கு ரசிகர்களை ஆயத்தம் செய்துவிடுகிறார்.

ஸ்ருதி ஹாசனுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. பட எண்ணிக் கையில்  அவருக்கு ஒன்று அதிகரிக்கும் அவ்வளவுதான்.

சலார் – பிரபாசின் பிரமாண்ட ஆக்ஷன்  அத களம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Foreign Sarakku Teaser Soon

Jai Chandran

Happy Birthday Suriya By Rajsekarpandian

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முதல்வருக்கு பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend