படம்: ஜிகிரி தோஸ்த்
நடிப்பு: ஷாரிக், அரண்.வி., ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, சிவம், கே. பி. ஒய்.சரத்,
தயாரிப்பு: பிரதீப் ஜோஸ், கே., அரண் வி
இசை: அஸ்வின் வினாயகமூர்த்தி
.ஒளிப்பதிவு: ஆர். வி.சரண்
இயக்கம்: அரண்.ஆர். வி
பி ஆர் ஒ: ஶ்ரீ வெங்கடேஷ்
ஷாருக், அரண், ஆஷிக் மூவரும் நண்பர்கள். அரண் டெரெரிஸ்ட் ட்ரேக்கர் என்ற கருவி கண்டு பிடித்து அதன் மூலம் 500.மீட்டர் தூரத்திலிருந்து யார் போனில் பேசினாலும் ஒட்டு கேட்டு கெட்ட செயலை தடுக்கலாம் என்கிறார். கல்லூரியில் அதை செய்து காட்ட முயலும்போது கருவி பழுதா கிறது. இதனால் பிரின்சிபால் அவரை திட்டி ரிஜெக்ட் செய்கி றார். இதில் அப்செட் ஆகும் அரண் நண்பர்களுடன் வெளியூருக்கு செல்கிறார். அப்போது இளம்.பெண் ஒருவரை ஒரு கூட்டம் கடத்துதைக் கண்டு ஷாக் ஆகி அவர்களை பின்தொடர் கின்றனர். இந்நிலையில் தங்களிடமிருக்கும் டெரெரிஸ்ட் ட்ரேக்கர் கருவியை பயன்படுத்தி கடத்தல் கூட்டத்தின் நடவடிக்கை களை கண்டறிகின்றனர். அதிர்ஷ்டவசமாக கருவி வேலை செய்ய அதன் மூலம் கடத்தப்பட்ட பெண்ணை எப்படி மீட்கின்றனர் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
கடத்தல் கூட்டம், பெண் கடத்தல், ரவுடி என்று ஆக்ஷன் களத்துக்கான கதையாக இருந்தாலும் கதை நகர்வதென்னவோ டெரெரிஸ்ட் ட்ரேக்கர் கருவியை காரணம் காட்டி ஆக்ஷன் காட்சி எல்லாம் வெறும் போன் உரையாடலாக .முடிந்து விடுகிறது. இப்பவாவது புகுந்து அடிப்பார்களா என்று டென்ஷன் உச்சத்துக்கு செல்லும் போது ஒரு வழியாக பைட் சீனில் ஷாரிக், அரண் இறங்கி தாக்குதல் நடத்துவது ஆறுதல் அதிலும் மற்றொரு நண்பர் ஆஷிக் பேசியே காலத்தை கழிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் நாகேஷ் போல் பயந்து மிரண்டு சிரிப்பூட்டுகிறார்.
ரவுடி அர்ஜுனனாக வரும் சிவம் முரட்டு விழிகளால் மிரட்டுகிறார். அவரது அன்னக்கைகளாள வரும் இரண்டு அடியாட்களும் சிவம் மனதில் இடம்.பிடிக்க போட்டி போட்டு வாங்கிக் கட்டிக் கொள்வது காமெடி.
நாயகிகளாக பவித்ரா, அம்மு அபிராமி நடித்துள்ளனர்.
இளைஞர்கள் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கி றார்கள் அவர்களது முயற்சியை பாராட்டலாம் ஆனால் இந்த கன்டென்ட் மட்டும் ஒரு சினிமா வுக்கு போதாது. அடுத்த படம் வேறலெவல் படமாக இருக்க வேண்டும்.
காட்சிகளை பொறுத்தவரையில் பில்டப் எதுவும்.செய்யாமல் எதார்த் தமாக இயக்கி இருக்கும் இயக்குனர் அரண் வி இயக்கத்தில் நேர்மை இருக்கிறது.
ஒளிப்பதிவு, இசை ஒ கே.
ஜிகிரி தோஸ்த் – பொழுது போகும்.