படம்: சாயம்
நடிப்பு: விஜய் விஷ்வா ஆண்டனிசாமி, ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின்,
தயாரிப்பு: ஆண்டனிசாமி, .ராமநாதன், எஸ்.பி.ராம்நாதன்
இசை: நாகா உதயன்
ஒளிப்பதிவு:கிரிஸ்ட்டொபர், சலீம்
இயக்கம்: ஆண்டனிடசாமி
பி.ஆர் ஒ: கே.எஸ்.கே. செல்வா
தேவகோட்டை பகுதியில் உள்ள மக்கள் ,சாதி, மத வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் ஆண்டுதோறும் ஒன்று கூடி தங்கள் தொழிலுக்கு வேண்டிய பணத்தை ஊர் கூட்டத்தில் கடனாக பெற்று அதை வருட இறுதியில் வட்டியுடன் திருப்பி அளித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் விஜய் விஷ்வாவுடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார் சக மாணவர் ராசய்யா. விஜய் விஷ்வாவுக்கும் அவரது அத்தை மகளுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் பேசி முடிக்கின்றனர். ஆனால் விஜய் விஷ்வா திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் சோகமான அத்தை மகள் ராசய்யாவை சந்தித்து விஜய் விஸ்வாவை திருமணத்துக்கு சம்மதிக்கும்படி கூறச் சொல்கிறார். இருவரும் சந்திக்கும் இந்த காட்சியை சாதி வெறிபிடித்த காசி, விஜய விஷ்வாவிடம் தவறாக எடுத்து கூறி நண்பர்களை பகைவர்களாக்குகிறார். கோபம் அடைந்த விஜய், ராசய்யாவிடம் சண்டைபோட. இதில் தவறி கீழே விழும் ராசய்யா இறந்துபோகிறார். கொலை பழி விஜய் மீது விழுகிறது. இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சியுடன் பதில் அளிக்கிறது .
படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் சாதி சாயம் பூசும் போக்கு எப்படி நடக்கிறது. இதனால் ஏற்படும் பகை, உயிரிழப்பு என்ன என்பதை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்டனி சாமி அத்துடன் சாதி வெறிபிடித்த காசியாகவும் நடித்து கதையை பரபரப்புடன் நகர்த்தி செல்கிறார்.
விஜய் விஷ்வா ஹீரோவாக நடித்துள்ளார். முதல்பாதிவரை சக மாணவரை பார்ப்பதுபோல் இயல்பாக நடித்திருக்கும் அவர் நண்பரை கோபத்தில் கொன்றபிறகு சிறைக் கைதியாகி ஆளே மாறிவிடுகிறார். சிறையில் அவரை கொல்ல ஒரு சாதியினர் முயலும் காட்சிகள் சிறைக்குள்ளும் எப்படி சாதி வெறி புகுத்தப்பட்டிருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எடுத்து சொல்கிறது.
நண்பரை கொல்ல விஜய் விஷ்வாவை ஆண்டனிசாமி தூண்டிவிடும்போது நட்பு என்ற பாலில் சாதி என்ற நஞ்சை கலப்பது எப்படி செய்கிறார்கள் என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
விஜய் விஷ்வாவின் பெற்றோராக பொன்வண்ணன், சீதா நடித்துள்ளனர் மகன் எங்கே கெட்டவனாகி விடுவானோ என்ற பயத்தில் விஜய் விஷ்வாவை பார்க்கும்போதெல்லாம் கண்டிக்கும் தந்தையாக பொன்வண்ணன் கண்டிப்பு தந்தையாக நடிப்பை வெளியிட மகன் மீது பாசத்தை பொழியும் தாயாக சீதா உருக வைக்கிறார்.
போஸ் வெங்கட், பெஞ்சமின், ஹீரோயின் ஷைனி கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர்.
ஒயொட் லேம்ப் புரடக்ஷன் சார்பில் ஆண்டனி சாமி, எஸ்.எம்.ராம்நாதன், ராமநாதன் த்யாரித்திருக்கின்றனர். சமுதாய நோக்குடன் கதையை இயல்பாக இயக்கி இருக்கிறார் ஆண்டனி சாமி. படத்தின் நீளத்தில் கத்தரிபோட்டால் இன்னும் விறுவிறுப்பு கூடும்.
நாகா உதயன் இசையில் ராஜாபவின் சாயல் இதமாக ஒலிக்கிறது.
கிரிஸ்ட்டோபர், சலீம் ஒளிப்பதிவு தெளிவான ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சாயம் – சாதி வெறியர்களின் சாயத்தை வெளுக்கும்.