பிரபல நடிகர் மட்டுமல்லாமல் கவுண்டமணி. இவரைப் பற்றி யூ டியூபில் வதந்தி பரவியது. இதையறிந்து கவுண்டமணி ஷாக் ஆனார் ஆனார்.
இதுகுறித்து அவரது மேனேஜர் விஜயமுரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
யூ டியூப்பில் நடிகர் கவுண்ட மணியைப் பற்றி வதந்தியை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறை யும் இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். யூ டியூப்பில் உள்ள கவுண்ட மணி பற்றிய தவறான தகவலை அவர்களே உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
இவ்வாறு விஜயமுரளி கூறி உள்ளார்.
மேலும் கவுண்டமணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.