Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராபர் படம் பேசும் முக்கிய விஷயம்..

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய
எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா. எஸ் தயாரித்துள்ளார். அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வாங்கி வெளியிடுகிறார். இந்த படத்தில் நாயகனாக சத்யா நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ராபர் படம் வெளியாகிறது.

Related posts

கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் கேங்ஸ்டர் படம் தொடக்கம்

Jai Chandran

முருகக்கடவுளை தவறாக பேசவில்லை: தயாரிப்பாளர் கே.ராஜன் அறிக்கை

Jai Chandran

The Lord of the Rings: Cast and crew receive a grand welcome from fans..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend