Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரியோராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்

நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப் படத்தை வெளியிட்டு உற்சாகத் துடன் அறிவித்துள்ளனர்.‌

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக் கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத் திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக் கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் தலைப்பினை அறிவிக்கும் காணொளி அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறை வடைந்த நிலையில்.. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்ப பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டி ருக்கிறது. இதனை பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளி யிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Related posts

ஷாருக்கின் “ஜவான்” 11 நாளில் ரூ. 400 கோடி வசூல் சாதனை

Jai Chandran

Arrtham First Look Motion Poster to be revealed On Tomorrow

Jai Chandran

பாரிஸ் கபே ( பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend