Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கின் “ஜவான்” 11 நாளில் ரூ. 400 கோடி வசூல் சாதனை

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத் துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தி ருக்கிறது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அற்புதமான சாதனையை முறியடிக்கும் வகையில் முதல் நாள் வசூலை பதிவு செய்த ஜவான், தற்போது 400 கோடியை மிக வேகமாக கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடி களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் உள்ளிட்ட வேறு அனைத்து மொழிகளையும் சேர்த்து கணக்கிட்டால், ‘ஜவான்’ திரைப்படம் 479.99 கோடி ரூபாயை நிகர வசூலாக பெற்றுள்ளது.‌ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த திரைப்படம் 49.55 கோடி ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. இந்தியில் வெளியாகி வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று.. இந்த அளவிற்கு வசூல் செய்தது அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை கடந்து சாதனையை படைத்து வருகிறது.

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் அதன் வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. இது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டாவது வார இறுதியில் கூட பாக்ஸ் ஆபிஸில் வலுவாக வசூல் செய்து வருகிறது. இரண்டாவது வார இறுதியில் இந்தியில் மட்டும் 82 கோடியே 46 லட்சத்தை வசூலித்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் இரண்டாவது வார இறுதியில் மொத்தம் 88 கோடியே 66 லட்சத்தை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

‘ஜவான்’ திரைப்படம் இந்தி திரையுலக சந்தையில் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், சர்வதேச திரையுலக சந்தைகளிலும் அலைகளை உருவாக்கியுள்ளது என்பது இந்த சாதனையை மேலும் வலிமையானதாக ஆக்குகிறது.‌

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப் பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியானது.‌

Related posts

Rocketry will be releasedbin theatres on 1st April 2022.

Jai Chandran

Disney+ Hotstar releases the teaser of Goli Soda – The Rising’

Jai Chandran

ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கும் ருத்ரதாண்டவம் ஷுட்டிங் தொடங்கியது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend