Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரிச்சர்ட் ரிஷி பிறந்த நாளில் ‘திரெளபதி2’ செகண்ட் லுக்..

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ‘திரெளபதி 2’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி அரசன் வீர சிம்ஹா கடவராயனாக நடித்திருக்கிறார்.

நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்திருக்க, மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியாகிறது. இந்தக் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் வெளியாகி யுள்ள இந்த போஸ்டரில் ரிச்சர்ட் ரிஷி அரச கலையுடனும் தீவிரமாகவும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் உள்ளது.

இயக்குநர் மோகன் ஜி, “இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். எங்கள் ஹீரோ ரிச்சர்ட் ரிஷிக்கு ‘திரெளபதி 2’ படக்குழு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 20 அன்று பிறந்தநாள் கொண்டாடிய ரிச்சர்ட் ரிஷி தனது திறமையான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர். ‘திரெளபதி 2’ படத்திற்காக அவரது மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்ததும் படத்தின் புரோமோஷன் பணிகளும் தொடங்க இருக்கிறது.

நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய் ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா மற்றும் பலர்.தொழில்நுட்பக்குழு விவரம்:

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் ஆர் சுந்தர்,
வசனம்: பத்மா சந்திரசேகர் & மோகன் ஜி,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் சந்தோஷ்.

Related posts

பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

Jai Chandran

கார்த்திக் நடித்த ” தீ இவன் ” படபிடிப்பு நிறைவு

Jai Chandran

Vikram Prabhu As Explosive Desi Raju

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend