Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்திக் நடித்த ” தீ இவன் ” படபிடிப்பு நிறைவு

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன் ‘. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் .
ஒளிப்பதிவு  Y.N.முரளி. எடிட்டிங் & பிண்ணனி இசை  ஏ.ஜே.அலி மிர்ஸா. நடனம் கூல் ஜெயந்த்.
நிர்வாக தயாரிப்பு அப்பு.
தயாரிப்பு மேற்பார்வை. ஜே.சுகுமார், எஸ்.ராபின்.
மக்கள் தொடர்பு -மணவை புவன்.
தயாரிப்பு நிர்மலாதேவி ஜெயமுருகன்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது விட்டது. திருப்பூரில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான டி. எம் ஜெயமுருகன் திருப்பூர் மாவட்டம் ஆட்சியரிடம் முறையாக அனுமதி கோரி அவரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அனுமதி வழங்கியதும் தமிழக அரசு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்தினோம்.
என்கிறார் இயக்குனர் டி.எம். ஜெயமுருகன்.
இந்த படத்தில் இடம்பெறும் ” ரைட்டும் ஓடுது ஒன் வேயில் ராங்கும் ஓடுது ” , தோப்புக்குள்ள குருவி ரெண்டு தாணானே “, ” ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டமென்ன உனக்கு ” என்ற மண் மனம் மாறாத மூன்று பாடல்களுக்கான காட்சிகளை ஒரே schedule ல் கூல் ஜெயந்த் நடன அமைப்பில் நாயகன் சுமன் மற்றும் நாயகி அர்த்திகா இருவரும் நடிக்க இயற்கை எழில் நிறைந்த வயல் வெளிகளில் படமாக்கப் பட்டுள்ளது.
படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts

நெட் பிளிக்ஸ் வெளியிட்ட மின்னல் முரளி” படத்தின் டிரெய்லர்

Jai Chandran

சூர்யாவின் மாஸ்  ‘கருப்பு’ பட டீசர் வெளியீடு 

Jai Chandran

Makers of Bhediya launch song Ennakai Pirathavale..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend