)
படம் : செக்யூரிட்டி
நடிப்பு : உதயா, கோமல் சர்மா, மணிகண்டன் சிவதாஸ், ஜேஷன் உதயா
தயாரிப்பு :உதயா
ஒளிப்பதிவு :எல்.கே.விஜய்
இசை :நரேன் பாலகுமாரன் எடிட்டிங் :வி. டான்பாஸ்கோ, வசனம்: ஷரண்.
இயக்கம் :உதயா
20 நிமிட குறும்படத்தில் ஒரு முழு நீள கதையை உருக்க மாக ஜாலியாக காமெடியாக அர்த்தத்தோடு சொல்ல முடியுமா என்று கேட்டால், முடியும் என்று வெறும் வார்த்தையில் சொல்லாமல் அதை செக்யூரிட்டி என்ற பெயரில் எடுத்துக்காட்டி இருக்கிறார் உதயா.
திருநெல்வேலில் தொடங்கி தலைவா படம் வரை பல படங்களில் நடித்திருக்கும் உதயா. அதில் எல்லாம் அவரிடம் ஒரு இளைஞனின் துடிப்பு தெரியும் இந்த படத்தில் 65 வயதான தனபால் என்ற ஒரு முதியவரின் முதிர்ச்சியான நடிப்பு தெரிகிறது. இது உதயா தானா என்று உற்று நோக்க வேண்டிய அளவுக்கு அடையாளமே தெரிய தளவுக்கு முக தோற்றம், வசன உச்சரிப்பு என்று வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
ராணுவ முகாமிலிருந்து மகன் போனில் பேசும்போது கொஞ்சம் பணம் சேரட்டும் ஊரில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வாழலாம் என்று ஆசையோடு கூறுவதும் அடுத்த போன் மகன் வீரமரணம் அடைந்த செய்தி வந்ததும் அழுது குமுறுவதும் உருக்கம்.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது பல்வேறு முகபாவனைகளை காட்டி மனதில் இடம் பிடிக்கிறார்.
கிளைமாக்ஸில் டிக் டாக் கோமல் ஓடிவந்து ஐயா என்னை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கும் போது கண்ணீர் மொட்டுக்களை திரள வைத்திருக்கிறார் இயக்குனர் உதயா.
உதயாவிற்குள் இப்படி யொரு இயக்குனர் ஒளிந்தி ருந்தது
எதிர்பாராத ஆசச்ரியம்.
டிக்டாக் பைத்தியமாக வரும் கோமல் சில டிக்டாக் பைத்தியங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் டிக்டாக் தடை என்று டிவியில் செய்தி வந்ததும் இடிந்து போவதும் காமெடி. மகனாக நடித்திருக்கும் ஜேஷன் உதயா ஆன்லைனில் படித்தபடி அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் யதார்த்தம் அருமை. மனைவி அடிக்கும் லூட்டிக்கு ஆமாம் சாமி போடும் அந்த கணவரும் கேரக்டராக மாறி இருக்கிறார்.
ராணுவ வீரர்களுக்கு படத்தை காணிக்கை செய்திருப்பது பொருத்தம். முழு படப்பிடிப்பும் ஒரே நாளில் நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியம்.
நரேன் பாலகுமாரன் இசை டான்பாஸ்கோ எடிட்டிங், ஷ ரண் வசனம் எல்லாமே ஒன்றாக கைகோர்த்து செயலாற்றியது படத்தின் மெருகுக்கு இன்னொரு காரணம்.
செக்யூரிட்டி கும்பத்தோடு ரசித்து பார்க்க பாதுகாப்பானவன்.