Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரேகை (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: ரேகை (வெப் சீரிஸ்)

நடிப்பு: பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித். இ..

தயாரிப்பு: எஸ் சிங்காரவேலன் (எஸ் எஸ் குரூப்)

கதை: ராஜேஷ் குமார

இயக்கம்: தினகரன். எம்.

OTT ரிலீஸ்: ZEE5 ஒரிஜினல்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

சப் இன்ஸ்பெக்டர் வெற்றி (பால ஹாசன்), காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) காதலித்து பிரிந்த ஜோடி என்றாலும் போலீஸ் வேலையில் சின்சியராக இருக்கின்றனர். பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இருந்த மாணவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் கிடைத்து வெற்றி அங்கு சென்று விசாரிக்கிறார். இந்த விசாரணையில் மேலும் சில இளைஞர்கள் விபத்து, தற்கொலை என வெவ்வேறு அதிர்ச்சி சம்பவங்களில் இறப்பதால் இதெல்லாம் எதனால் நடக்கிறது, கொலை செய்வது யார் என விசாரணை தீவிரமாகிறது
இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது. அதுவே சீரிசை கடைசி வரை திரில்லாக நகர்த்தி செல்கிறது.

70ஸ் 80ஸ் காலகட்டங்களில் கிரைம் நாவல்கள் எழுதி புகழ் பெற்ற ராஜேஷ் குமார் எழுதிய அவரது ஒரு கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் வெப் சீரிஸ் தான் ரேகை.

சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசன் காக்கிச்சட்டை கதாபாத்திரத்திற்கு டிப் டாப்பாக பொருந்தியிருக்கிறார்.

“இந்த விசாரணைய நிறுத்திட்டு வேற வேலைய பாரு”ன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாலும் விடாமல் தீவிர விசாரணையில் ஈடுபடும் பாலஹாசன் நடிப்பில் ஈடுபாடு தெரியும்வேளையில் இன்னொரு பக்கம் காதலி பவித்ரா ஜனனியை ஒரு அதிகாரியாக கண்டிப்புடன் நடத்துவதும், மாஜி காதலியான அவரிடம் காதல் பொறாமையை காட்டுவதுமாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

பவித்ரா ஜனனி சராசரி பெண் போலீசாக எதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கும் கொஞ்சம் ஆக்ஷன் சீனை இயக்குனர் தந்திருக்கலாம்.
வழக்கமாக அம்மா, அண்ணி ரோலில் நடிக்கும் வினோதினி இதில் போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் அதிர்ச்சியையும் தருகிறது. அதுயென்ன அதிர்ச்சி என்பதை
வெப் சீரிஸ் பார்க்கும்போது புரியும்.

எஸ் சிங்காரவேலன் (எஸ் எஸ் குரூப்) தயாரித்திருக்கிறார்.

கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் ரேகையை மையமாக வைத்து கிரைம் சதுரங்கம் ஆடியிருக்கிறார்.

மெடிக்கல் திரில்லராக வெப் சீரிசை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார்  தினகரன் எம்.

ZEE5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில்  இந்த வெப் சீரிஸ் வெளியிட்டிருக்கிறது.

ரேகை – யூகங்களை தூண்டிவிடும் சஸ்பென்ஸ் திரில்லர்.

Review By Jayachandhiran .k.

Trendingcinemasnow.com

 

Related posts

HanuMan Song From Prasanth Varma’s HANU-MAN

Jai Chandran

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்

Jai Chandran

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி68

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend