Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரெட் பிளவர் (பட விமர்சனம்)

படம்: ரெட் பிளவர்

நடிப்பு: விக்னேஷ் (இரு வேடம்), மனிஷா ஜஸ்நானி,  அல் மாஸ் ஆடம், ஷாம், நாசர், ஒய் ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், ஜான் விஜய், அஜய் ரத்னம், டி எம் கார்த்திக், மோகன்ராம், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, யோக் ஜோபி, லீலா சாம்சன்

தயாரிப்பு: கே மாணிக்கம்

இசை: சந்தோஷ் ராம்

ஒளிப்பதிவு: தேவ சூர்யா

இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

பி ஆர் ஓ: ஷேக்

இரண்டு உலகப்போர் முடிந்த நிலையில் மூன்றாம் உலகப்போரும் முடிந்த பிறகு 2047 ஆண்டில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ரெட் பிளவர்.

மூன்றாம் உலகப்போர் முடிந்த பிறகு உலகின் பெரும்பாலான நாடுகள் மால்கம் அரசாட்சியின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இந்தியாவின் மீதும் மால்கம் அரசாட்சியின் பார்வை திரும்புகிறது. “நாங்கள் கேட்கும் வரியை கட்டாவிட்டால் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்” என்று மால்கம் அரசு எச்சரிக்கிறது. ஆனால் அதற்கு அடிபணிய மாட்டோம் எதையும் சந்திக்க  தயார் என்று சவால் விடுகிறது இந்தியா. இதற்கான திட்டங்களை செயல்படுத்த உளவாளி விக்கியிடம் அரசு ஒப்படைக்கிறது. இதன் முடிவு என்னவாகிறது என்பதை ஹாலிவுட் பாணியில் சொல்கிறது கிளைமாக்ஸ் .

நீண்ட நாட்கள் பிறகு விக்னேஷ் நடித்திருக்கும் படம் சிட்டி சப்ஜெக்ட் அல்லது லவ் சப்ஜெக்ட் படமாக இருக்கும் என்று பார்த்தால் ஏதோ ஹாலிவுட் போர் படத்துக்கு வந்துவிட்டது போன்ற உணர்வை தொடக்கம் முதலே தரத் தொடங்கி விடுகிறது படம். சரி சில ரீல்களுக்கு  பிறகு நார்மல் பாணிக்கு படம். வந்துவிடும் என்று பார்த்தால் அந்த பேச்சுக்கே இடமில்லை என்பதுபோல் காட்சிகள் ஆயுத தாக்குதல், அடிமையாக சிக்கிய பெண்களை கொடுமை  படுத்துதல், இந்திய பிரதமருக்கு போர் மிரட்டல் என்று அந்த ரேஞ்சிலேயே  படம் தொடர்கிறது.

15 அல்லது 20 நிமிடத்துக்குள்ளேயே விக்னேஷ், ஒய் ஜி.மகேந்திரன்,  ஜான் விஜய்,  தலைவாசல் விஜய், நாசர்,  சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி என ஏராளமான நட்சத்திரங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வருகிறார்கள். முகமூடி அணிந்த பாதுகாவர்கள் இளம் பெண்களை கண்ணை மூடிக்கொண்டு சுட்டு தள்ளுகிறார்கள். மேக்சிமம்  எவ்வளவு முடியுமே அவ்வளவு கவர்ச்சியாக நடிகைகள் நடித்திருப்பது இளவட்டங்களை  ஈர்க்க இயக்குனர் போட்ட  கணக்குபோல் தெரிகிறது.

விக்னேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினுக்கு ஹாலிவுட் பாணியில் லிப் டு லிப் கிஸ் அடித்து மனுஷன் நல்லாவே என்ஜாய் செய்திருக்கிறார். எல்லாமே டுமீல் டுமீல் சண்டை என்பதால்  கை சண்டைக்கு வாய்ப்பில்லாமல் போவது ஏமாற்றம்.

ஹீரோயின் மனிஷா ஜஸ்நானி ஸ்பெஷல் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

படம் 90 சதவீதம் வி எப் எக்ஸ், கிராபிக்ஸ் என ஹாலிவுட்டுக்கு நிகராக தொழில் நுட்பத்தை கையாண்ட இயக்குனர்  ஆண்ட்ரூ பாண்டியன். கொஞ்சம் ஓவராகவே எதிர்காலம் பற்றியும்,  மூன்றாம் உலக போர் பற்றியும் யோசித்து விட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால் 2047லும் அதே நாசர், நிழல்கள் ரவி ஜான் விஜய், நிழல்கள் ரவி…

தயாரிப்பாளர் கே மாணிக்கம் ஒlரு கை பார்த்துவிடலாம்  என்பதுபோல் செலவழித்திருக்கிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் ராம்  பான் இந்தியா படம்போல் இசையை பொளந்திருக்கிறார்.

கேமராமேன் தேவ சூர்யாவும் தமிழ் படம் பார்க்கிற நினைப்பே வரக்கூடாது என்பதுபோல் கங்கணம் கட்டிக்கொண்டு ஹாலிவுட் கலர் டோனில் கேமிராவை சுழற்றியிருக்கிறார்.

ரெட் பிளவர் – தமிழில் ஒரு  war Movie.

By ஜெயச்சந்திரன் கே

 

Related posts

VANAM Movie Trailer

Jai Chandran

டெல்லி விவசாயிகள் போராட்ட கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற நடிகர் கார்த்தி வலியுறுத்தல்

Jai Chandran

Aditi Balan as ‘Kanmani’ in Karumegangal Kalaiginrana

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend