Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரேசர் (பட விமர்சனம்)

படம்: ரேசர்

நடிப்பு: அகில் சந்தோஷ், லாவண்யா, திரவுபதி சுப்ரம ணியன், ஆறு பாலா மற்றும் பலர்

தயாரிப்பு: கார்த்திக் ஜெயாஸ்

இசை: பரத்

ஒளிப்பதிவு:பிரபாகர்

இயக்கம்: சதீஷ்

பி ஆர் ஒ: வேலு

நடுத்தர குடும் பத்தில் பிறந்த அகில் சந்தோ ஷுக்கு சிறுவயது முதலே மோட்டார் பைக் வீரராக வேண்டும் என்பது கனவு. வளர்ந்த பின் தன் ஆசையை தந்தையிடம் சொல் கிறார். அவரோ அதெல்லாம் வேண்டாம் நன்றாக படி என்று சொல்கிறார். ஆனாலும் பைக் வீரர் ஆசையை மாற்றிக்கொள்ளாமலி ருக்கும் அகில் தானே வேலைக்கு சென்று ஒரு பைக் வாங்குகிறார். வீட்டுக்கு தெரியாமல் மோட்டார் பைக் பந்தயத் தில் பங்கேற்க பயிற்சி எடுக்கிறார். அவரது லட்சியம் நிறைவேறு கிறதா, தந்தையால் அந்த ஆசை வீணாகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சில படங்கள் சத்தமில்லா மல் வரும் ஆனால் அற்புத மான படைப்பாக இருக்கும் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் படம்தான் ரேசர்.

எந்த காட்சியும் இட்டுக்கட்டி சொல்லாமல் வாழ்க்கை யில் குறிப்பாக மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை யின் ஆசை , அக்குடும்பத் தில் பெரிய கனவுடன் இருக்கும் மகனின் லட்சியம் என நறுக்கு தெரித்தார்போல் படம் சொல்கிறது.

ஹீரோ அகில் சந்தோஷ் எந்த பந்தாவும் காட்டாமல் தன் கதாபாத்திரத்தில் ஒன்றிப் போய் நடித்திருக் கிறார். தந்தையிடம் பைக் கேட்கும் போதும் , பைக் ரேசர் ஆக வேண்டும் என்று ஆசையை அமை தியாக வெளிப் படுத்து வதும், தந்தையோ குடும்ப நிலையை எடுத்துச் சொன்னவுடன் அவரது எண்ணத்தை ஏற்றுக் கொண்டு அப்பாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து “சரிப்பா” என்று அகில் அமைதியாக செல்வதும் பல பிள்ளைகள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்பான காட்சிகள்.

தந்தையால் பைக் வாங்கித்தர இயலாது என்று தெரிந்ததும் தானே வேலைக்கு சென்று பைக் வாங்குவதும் தன் வருமானத்துக்கு மீறி குடும்ப செலவு அதிகரிக் கும்போது கூடுதலாக இன்னொரு வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை யும் சுமக்க முன் வருவது என அகல் தங்கமான பிள்ளை என்று அப்ளாஸ் பெறுகிறார்.

பைக் ரேஸில் பங்கேற்க அகில் பயிற்சி எடுப்பது, தன்னிடம் மோதும் சக வீரருடன் மல்லு கட்டாமல் தனது பயிற்சியாளர் ஆலோசனைப்படி போட்டி யில் மட்டும் கவனம் செலுத்துவது எல்லாமே நிஜ வாழ்விலும் ஒர்க் அவுட் ஆகும் எதார்த் தங்கள்.

இப்படத்தில் தல அஜீத்தின் ரேஸ் பைக் ஒன்றும் ஒரு காட்சியில் வருகிறது. அதை சம்பந் தப்பட்ட ரசிகர்கள் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் என்பதால் அதற்காக படக்குழு ஒரு போட்டியை கூட நடத்தலாம்.

ஹீரோயின் லாவண்யா சில காட்சிகளில் வந்தா லும் மனதில் இடம் பிடிக்கி றார்.

ஹீரோ தந்தையாக வரும் திரவுபதி சுப்ரமணியன் மிடில் கிளாஸ் குடும்ப தலைவராக பக்குவமான நடிப் பால் மின்னுகிறார் மெக்கானிக் ஆறுபாலா வாழும் சில நிஜம்.

ஒரு இளைஞனின் பைக் ரேஸ் கனவை இதைவிட அருமையாக, எதார்த்தமாக பைக் ரேஸ் விதிகள் புரியும்படி வேறு எந்த இயக்குனராலும் சொல்லி விட முடியாது. அந்த பணியை கனக்கச்சிதமாக நிறை வேற்றி இருக்கிறார் இயக்குனர் சதீஷ்.

கார்த்திக் ஜெயாஸ் பிரமாண்டம் என்று சொல்ல பெரிய செட்கள் எதையும் அமைக்கா விட்டாலும், பிரமாதம் என்கிற அளவுக்கு குறையில்லாமல் காட்சிகளை படமாக்க செலவழித்துக்கிறார்.

பரத் இசை,
பிரபாகர் ஒளிப் பதிவு எல்லாமே படத்துக்கு பெரும் பலம். இவர்களின் பங்களிப்பு இயக்குனரிடம் இவர்களுக்குள்ள புரித லையும் வெற்றியை தவறவிடக் கூடாது என்ற முனைப்பையும் காட்டு கிறது.

இதெல்லாமே சொதப்பா மல் இருக்கும்படி ஜம்ப் இல்லாத எடிட்டிங் செய்தி ருக்கும் எடிட்டருக்கும் நிறையவே பங்கிருக் கிறது.

குறை சொல்ல வேண்டு மென்றால் ஒன்றைச் சொல்லலாம் இதில் பைக் ரேசை குறைந்தது 100 பைக்குகளையாவது பந்தயத்தில் இடம் பெறச் செய்து காட்சிகளை சினிமாத்தனமாக்கியிருக்கலாம். நல்லவேளை அந்த
தவறை இயக்குனர் செய்ய வில்லை.

ரேசர் – எளிமையாக எடுக்கப்பட்ட வலுவான படம்.

Related posts

சூரி, விஜய் மில்டன் வெளியிட்ட “மகாசேனா” பர்ஸ்ட் லுக்

Jai Chandran

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ( பட விமர்சனம்)

Jai Chandran

க்ரைம் திரில்லர் படத்தில் விதார்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend