படம்: இது கதையல்ல நிஜம்
நடிப்பு:. சந்தோஷ் சரவணன், சுனு லட்சுமி, ஆர்.வி.உதயகுமார், சென்றாயன், மொட்டை ராஜேந்திரன், டி. பி.கஜேந் திரன், கோவை சரளா
தயாரிப்பு: கண்ணன் ராஜமாணிக்கம்
இசை: தாஜ்நூர்
ஒளிப்பதிவு: ராஜ் துரை
இயக்கம்: கண்ணன் ராஜமாணிக்கம்
பி ஆர் ஒ: விஜயமுரளி, கிளாமர் சத்யா
அனாதையாக சுற்றித் திரியும் சுடலையை (சந்தோஷ் சரவணன்) காவல் அதிகாரி ஆர்.வி. உதயகுமார் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் மகன், மகனுடன் மற்றொரு மகன் போல் வளர்க்கிறார். சிறுவயதிலேயே எடுபிடி வேலைகளை போலீஸ் நிலையத்தில் செய்கி றான். இந்நிலையில் போலீஸ் அதிகாரி இறக்கி றார். அவரது மற்றொரு மகன் போலீஸ் கான்ஸ் டபிள் ஆகிறான். அதே ஊரில் இருக்கும் ஏழைப் பெண் ராசாத்திக்கு (சுனுலட்சுமி) சுடலை மீது காதல் பிறக்கிறது. இந்நிலையில் சுடலையை இறந்த போலீஸ் அதிகாரி யின் மகளும் காதலிக் கிறாள். அண்ணன் தங்கைப்போல் பழகிய தால் இந்த காதலை சுடலை ஏற்க மறுக்கிறான். இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கி டையில் புதிதாக வரும் இன்ஸ்பெக்டருக்கு சுடலை மீது பகை ஏற்பட்டு அவனை பழிவாங்க துடிக்கிறார். இதன் முடிவு என்ன என்பதை உருக்க மாக சொல்கிறது படம்.
அருவியையொட்டி கிராம பகுதியில் நடக்கும் காதல் கதையாக உருவா கியிருக்கிறது இப்படம். சுடலையாக நடித்திருக்கி றார் சந்தோஷ் சரவணன்.
முதலில் சற்று தடுமாறி னாலும் பின்னர் வேடத்தில் ஒன்றிவிடுகி றார்.
பிணத்தை அருவியிலி ருந்து எடுக்க தயங்காமல் நீருக்குள் டைவ் செய்து ஒரு கட்டத் தில் தன்னு டைய காதலியின் பிணத் தையே தூக்கி வந்து கதறுவதும் அதிர்ச்சி.
கதையில் வைக்கப்பட்டி ருக்கும் சஸ்பென்ஸ் கிளை மாக்சில் வெளிப்படும் போது டிவிஸ்ட் சென்டி மென்ட்டாக ஒர்க் கவுட் ஆகியிருக்கிறது.
கோவை சரளா, சென்றா யன், மொட்டை ராஜேந் திரன் காமெடி ஓகே ரகம் இதில் இன்னும் சில காட்சி களை கூடுதலாக்கி கலகலப்பை அதிகரித்தி ருக்கலாம்.
ஜெகன் குணசித்திர பாத்திரத்தில் நெகிழ் கிறார்.
இந்த கதைக்கு இந்த அளவுப்போதும் என்று இயக்குனர் கண்ணன் ராஜ மாணிக்கம் அளந்து அளந்து காட்சிகளை படமாக்கியிருப்பதும் அழகு.
தாஜ்நூர் இசை படத்துக்கு நன்கு கைகொடுத்திருக் கிறது. பாடல் காட்சி உள்ளிட்ட முழு படத்தையும் படமாக்கியபிறகு இப்படத் துக்கு இசை அமைத்தி ருக்கும் சவாலை தாஜ்நூர் முழுமையாக நிறைவேற்றி யிருக்கிறார்.
இது கதை அல்ல நிஜம் – காதல் சஸ்பென்ஸ்.

