Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரபாஸ் பிறந்தநாள் : ரசிகர்களுக்கு  அட்வான்ஸ் விருந்து..

பாகுபலி  பட ஹீரோ பிரபாஸ் பிறந்த நாள் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று   கொண் டாட உள்ளார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பை தயாரிப்பாளர்கள் மேற் கொண்டுள்ளனர். அவரது பிறந்த நாளுக்கு 2 தினங்களுக்கு முன்பே ரசிகர் களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்ன கையை கொண்டுவரும் நோக் கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர் களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத் திரத்தின் போஸ்டரை வெளி யிட்டுள்ளனர். அதன் படி ‘விக்ரமாதித்யா’ என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதி பலிப்பதாக உள்ளது.

 

 

“CAPTION AND LINK” எனப் படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந் துள்ளனர். தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸின் ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடு கின்றனர். அதேவேளையில், படக்குழுவினர் தற்போது இத்தாலி நாட்டின் டோரினா வின் அழகிய மலைப்பகுதி களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந் துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங் களால் அறியப்படுகிறது.
இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப் படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்து கிறது. பிரம்மாண்ட படைப் பான ‘ராதேஷ்யாம்’ திரைப் படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்பட த்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட் டோரும் இதில்  நடிக்கின் றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக வுள்ளது.
UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத் வம்சி தயாரிப்பில்
ராதா கிருஷ்ண குமார் இயக்கத் தில் ரொமாண்டிக் பீரியட் படமாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படம் “அழகிய கண்ணே” !!

Jai Chandran

அக்ஷய் குமாரின் ‘புரொடக்ஷன் 27’ பட ரிலீஸ் தேதி

Jai Chandran

இளையராஜாவிடம் ஆசி பெற்ற சாமானியன் குழு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend