Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராங்கி (பட விமர்சனம்)

படம்: ராங்கி

நடிப்பு: த்ரிஷா, அனஸ்வரா ராஜன்

தயாரிப்பு: லைகா சுபாஸ்கரன்

இசை: சி.சத்யா

ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல்

கதை: ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்கம்:
எம்.சரவணன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ One), நாசர்

தையல்நாயகி (த்ரிஷா) பரப்பரப் பான ஜெர்னலிஸ்ட். சர்ச்சைக் குள்ளாகும் செய்திகளை துணிச்ச லாக வெளியிடுபவர். அவருடைய அண்ணனும் அதே நிறுவனத்தில் ஜெர்னலிஸ்ட்டாக இருக்கிறார். பயந்த சுபாவம் கொண்டவர். ஒருமுறை தையல்நாயகியிடம் கண்கலங்குகிறார் அண்ணன். என்னவென்று விசாரிக்கும்போது தன் மகளை யாரோ நிர்வாண படம் எடுத்து தனக்கு அனுப்பி மிரட்டுவ. தாக சொல்கிறார். அவருக்கு ஆறுதல் கூறும் தையல்நாயகி  அந்த விஷயத்தை தான் பார்த்துக் கொள்வதாக கூறி விசாரணையில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் அது தன் அண்ணன் மகளே அல்ல போலியான பேஸ்ஃபுக் கணக்கு என்று கண்டுபிடித்து அதில் மெசேஜ் அனுப்பியவர்களை வரவழைத்து எச்சரிக்கிறார். கடைசியாக ஆலிம் என்ற நபர் சாட் செய்ய அவருடன் தையால்நாயகி தொடர்ந்து சாட் செய்கிறார். ஒரு கட்டத்தில் அவன் உஸ்பெகிஸ் தான் தீவிரவாதி என்று தெரிகிறது. விஷயம் விபரீதமாகி மத்திய புலன் விசாரணை வரை செல் கிறது. தையல் நாயகியை கைது செய்து விசாரிக்கின்றனர். அந்த தீவிரவாதியை பிடிக்க தையல் நாயகியை உஸ்பெகிஸ்தானுக்கே அழைத்துச் செல்கின்றனர். அடுத்து நடப்பது அதிரடி திருப்பங்களாக அமைகிறது.

பொன்னியின்செல்வன் படத்தில் குந்தவையாக ஒரு அசத்து அசத்திய த்ரிஷா ராங்கியில் முற்றிலும் மாறுபட்ட உடல்மொழி யுடன் தையல்நாயகி என்ற பாத்திரத்தில் நடித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

தெனாவட்டான நடை , எதற்கும் பயப்படாமல் போல்டாக பேசும் பேச்சு , ஜீன்ஸ் பேன்ட் – டி ஷர்ட் அணிந்து டீக்கான தோற்றம் என தையல்நாயகி பாத்திரத்துக்காக த்ரிஷா தன்னை புதுமைப் பெண்ணாக மாற்றிக்கொண்டி ருப்பது அந்த கதாபாத்திரத்தின் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

அண்ணன் மகளிடம் ஆபாசமாக சாட் செய்தவர்களை அழைத்து எச்சரிக்கும் த்ரிஷா இன்னொரு முறை இப்படிபண்ணா அறுத்திரு வேன் என்று சொல்லி தெறிக்க விடுகிறார்.

நடுரோட்டில் மடக்கி வம்பிழுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சூடான பதில் அளிப்பதும், எதற்கெடுத்தாலும் தாழ்பணிந்து கேட்க வைக்கும் அதிகார வர்கத்தின் திமிரையும் தட்டிக் கேட்பதுமாக விஜய் ரேஞ்சிக்கு வசனத்தில் துவைத் தெடுக்கும் போது திரிஷாவுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

இந்தகோபம் ஆத்திரம் எல்லாம் தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த ஆலிம்டம் சாட் செய்யும்போது மறைந்து அங்கு அன்பொழுக பேசும்போது இது அன்பையும் மீறிய காதலாகவே தெரிகிறது. ஒருவிஷயம் என்ன உதைக்கிற தென்றால் ஆலிமுக்கு வயது 17 என்பதுதான்.

திரிஷாவுக்கும் ஆலிமுக்கும் இடையே வருவது காதல்தானா என்று இயக்குனர் சரவணனிடம் கேட்டபோது ஆமாம் இது காதல் தான் என்று உறுதி செய்தார்.

உஸ்பெகிஸ்தான் காட்சிகள் கண்ளைவிட்டு அகல மறுக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் மிஷின் கன் சத்தம் காதை துளைக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலிலி  ருந்து த்ரிஷா தப்பிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இதுவரை த்ரிஷாவிடம் காணாத தைரியத்தின் வெளிப் பாடு.

த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்திருப்பவர் அப்பாவிதனத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கி றார். ஆனால் அவரை எல்லா ஆடையையும் கழற்ற சொல்லி பேஸ்ஃபுக்கில் உள்ள ஆபாச படம் அவரது தானா, இல்லையா?என்பதை ஹத்ரிஷா உறுதி செய்வது நெருடு கிறது. அண்ணன் மகளை எந்த அத்தையாவது இப்படி நிர்வாணமாக்கி பார்ப்பாரா ? இதை வேறுகோணத்தில் இயக்குனர் யோசித்திருக்க வேண்டும்.

தீவிரவாத இளைஞன் ஆலமாக வருபவரின் நடிப்பில் எனர்ஜி 100 சதவீதத்தை தாண்டியிருக்கிறது.

லைகா சுபாஷ்கரன் மாறுபட்ட காதல் கதையை தயாரித்திருக் கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கதையின் கணம் வசனங்களில் எதிரொலிக்  கிறது.

எம்.சரவணன் இயக்கம் மணிரத்னத்தின் பாணியில் புயலாக வீசுகிறது.

சத்யா.சி இசையும், கே.ஏ.சக்தி  வேலின் ஒளிப்பதிவும் உஸ்பெகிஸ்தானுக்கே அழைத்துச் செல்கிறது.

ராங்கி – த்ரிஷாவின் தாண்டவம்.

Related posts

Pushpa First Single on AUG 13th

Jai Chandran

Lokesh to Release the First Look of Santhanam Movie

Jai Chandran

திரு மாணிக்கம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend