Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘நாலணா முறுக்கு” – ஆர்.ஜே.பாலாஜியின் புதிய நிகழ்ச்சி

டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், மிக பிரபலமானதாக இருக்கிறது. இளைஞர்களின் உலகை ஆக்கிரமித்திருக்கும் Podcast உலகத்திற்குள மிக பெரிய அளவில், இன்றைய நவீன விசயங்களை, உள்ளூர் அறிஞர் களுடன் கலந்துரையாடும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, Spotify original நிறுவனம் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜி Podcast என்ற பெயரில் வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, ரேடியோ ஜாக்கி, நடிகர், காமெடியன், இயக்குநர், வர்ணனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் பாலாஜி பட்டுராஜ் எனும் R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். வாராவாரம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சி இன்று முதல் துவங்கவுள்ளது.

பன்முக திறமைகள் மூலம் இளைஞர்களிடம் மிகப்பெரும் பிரபல்யத்தை பெற்றிருக்கும் R.J.பாலாஜி அவர்கள், தனது பிரத்யேகாமான அசத்தும் பேச்சு திறமையால், புதுவகையில் இந்நிகழ்ச்சியை வழங்குகிறார். இன்றைய நவீன உலகில் இந்தியா எதிர்கொள்ளும், பொது பிரச்சனைகள் குறித்து, அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் உரையாடி, அவர்களின் பார்வைகளை, அனுபவங்களை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

இது குறித்து RJ பாலாஜி கூறும்போது..
Spotify original நிறுவனத்துடன் இப்படியொரு அழகான நிகழ்ச்சியில், இணைந்து பணியாற்றுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, புதிதானதை கற்றுக்கொள்ள, எனக்கொரு வழிகாட்டியாக இருக்குமென நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி இன்றைய இந்தியாவின் பொது பிரச்சனைகளை, முக்கியமாக இணையத்தில் தவறான வகையில் பரப்பப்படும் பொய்யான கருத்துக்களில், ரசிகர்களுக்கு சரியான விழிப்புணர்வை எடுத்துரைப்பதாக இருக்கும். எந்தவித பொறுப்பும் இல்லாமல், எல்லாம் கொட்டிகிடக்கும் டிஜிட்டல் உலகில், இந்நிகழ்ச்சி இன்றைய அதிமுக்கிய பிரச்சனைகளில் மிகப்பொறுப்புடன், நகைச்சுவை கலந்து, ரசிகர்களை ஒரு அற்புத பயணத்திற்கு அழைத்து செல்லும்.

Spotify original நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாவது..
ஆங்கிலமல்லாத, உள்ளூர் மொழியிலான Podcast நிகழ்ச்சிகள், இந்தியாவில் தற்போது மிக பிரபலமாகி வருகிறது. வீடியோ திரை இல்லாமல், உலகில் தன்னை இணைத்து கொள்ள விரும்பும் இளைய தலைமுறைக்கு, இம்மாதிரியான Podcast நிகழ்ச்சிகள், ஒரு அற்புதமான உயர்வகை அனுபவத்தை வழங்குகிறது. தமிழில் பெரிய அளவில் இந்ததுறை வளர்ந்து வரும் நிலையில், இளைய தலைமுறையினரிடம் மிக பிரபலமான ரேடியோ ஜாக்கியாக வலம்வரும், திறமையாளர் RJ பாலாஜி அவர்களுடன், எங்கள் நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குவது மகிழ்ச்சி. உள்ளூர் விசயங்களில், புதிய வகையிலான கோணத்தை, கலாச்சாரத்தின் தன்மையை, ரசிகர்கள் விரும்பும் வகையில், வெளிப்படுத்தும் வகையில், தமிழில் தரமான ஒரு நிகழ்ச்சியாக, இந்நிகழ்ச்சி இருக்கும்.

மிக வேகமாக வளர்ந்து வரும் Podcast உலகில், நிகழ்ச்சி தயாரிப்பாளர், ரசிகர்கள் என இருவரின் புள்ளியிலும் தரமான வகையில், ரசிகர்கள் விரும்பி கேட்கும், Amit Tandon வழங்கும் Andar Ki Baat, Crime Kahaniyan, Dr. Phobia வழங்கும் Darr Ka Raaz மற்றும் Shuddh Desi Gay, மேலும் பலர் வழங்கும் 36 ஒரிஜினல் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை Spotify original வழங்கி வருகிறது. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 2.6 மில்லியன் podcast தலைப்புகளை, Spotify உலகம் முழுதும் வழங்கி வருகிறது.

Related posts

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “ஃபர்ஸ்ட் லவ்” ஆல்பம் பாடல் !

Jai Chandran

Rocky Promo song featuring Nayanthara Out Tomorrow..!

Jai Chandran

Deva’s Gaana song From ‘Take Diversion.l Declared a Chartbuster

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend