படம் : ரணம் அறம் தவறேல்
நடிப்பு: வைபவ், நந்திதா ஸ்வேதா தான்யா ஹோப், சுரேஷ் சக்ரவர்த்தி , டார்லிங் மதன், ஜீவா சுப்பிரமணியன், பத்மன், விலங்கு கிச்சா ரவி, தாசரதி, தயாளன், மது நாகராஜன்
தயாரிப்பு: மது நாகராஜன்
இசை: அரோல் கரோலி
ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா
இயக்கம்: ஷெரிப்
பி ஆர் ஒ: சதீஷ்குமார்
நகரில் ஆங்காங்கே கை கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு எரிந்து நிலையில் அட்டைப் பெட்டியில் பொது இடங்களில் போடப்படுகிறது. போலீஸ் நிலையம் அருகிலும் இதுபோன்ற கை , கால்கள் வீசப்படுகின்றன. இதனால் நகரமே பதற்றம் ஆகிறது. அதற்கு மேல் போலீசார் பதற்றம் அடைகிறார்கள். இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க எரிந்த உடல்களின் மாதிரிகளை வைத்து வரைபடம் வரைந்து தருகிறார் வைபவ். ஒரு சமயம் போலீஸ் இன்ஸ்பெக்டரே காணாமல் போய்விடுகிறார். அவருக்கு பதிலாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வருகிறார். அவர் நடந்த விவரங்களை அறிந்து கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாக துப்பு துலக்குகிறார். வைபவும் உதவி செய்கிறார். ஆனால் இறுதிகட்டம் வரை கொலைகளை செய்வது யார் ? கடத்தப்பட்ட இன்ஸ்பெக் டரின் கதி என்ன? என்பதை அறிய முடியவில்லை. மேல் அதிகாரிகள் பிரஷர் தர பெண் போலீச இன்ஸ் பெக்டர் டென்ஷன் ஆகிறார்
இந்த நிலையில் வைபவ் க்ரைம் ரிப்போர்ட் ஒன்றை எழுதுகிறார் அதன் அடிப்படையில் கொலை யாளி யார் என்பது தெரிய வருகிறது. அவர் கொலைகளை செய்வது ஏன் அதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை ரணம் அறம் தவறேல் படம் விளக்குகிறது.
அதிக பரபரப்பு இல்லாமல் திரைக்கு வந்திருக்கும் படம் ரணம் ஆனால் படத்தில் காட்சிக்கு காட்சி பரபரப்பு எகிறிக் கொண்டே போகிறது.
வைபவ் ஒரு வரைபட நிபுணராக வருகிறார். அவரது கதாபாத்திரம் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் அதைவிட பெரிய திருப்பங்களை படத்தில் வைத்தி ருக்கிறார் இயக்குனர் ஷெரிப்.
போலீஸ் நிலையம், பொது இடங்களில் எரிந்து நிலையில் கை, கால்கள், தலைகள் கண்டெடுப்பது திகிலை ஏற்படுத்துகிறது. யார் அந்த கொலையாளியாக இருப்பார் என்று ஒவ்வொருவர் மீதும் சந்தேக கண்களை காட்சிகள் பதிய வைத்திருப்பது கிளைமாக்ஸ் நெருக்கத்திற்கு ரசிகர்களை எளிதாக கொண்டு சென்று விடுகிறது. படத்தின் பிற்பகுதியில் வரும் திருப்பங்கள் அதை இன்னும் வேகப்படுத்துகிறது.
நந்திதா சுவேதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார் சந்தோஷமாக வாழும் நிலையில் விபத்தில் மகள் இறப்பதைக் கண்டு துடியாய் துடிக்கிறார் நந்திதா. வேதனை தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலையும் செய்து கொள்கிறார். ஆனால் இக்காட்சsயில் ஒரு மர்ம முடிச்சை வைத்திருப்பது தான் கிளை மாசுக்கு கைகொடுக்கிறது. .
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக தான்யா ஹோப் நடித்துள் ளார். வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் அவர் அலட்டல் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை இயல்பாக போலீஸ் கெத்துடன் செய்திருப்பது யார் இந்த தான்யா என்று இன்னொரு முறை வியக்க வைக் கிறார்.
போலீசாக வரும் சுரேஷ் சக்கர வர்த்தி கதையில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்பதை தொடக்க காட்சிகளில் யூகித்து பார்க்க முடியவில்லை. சஸ்பென்ஸ் ஓபன் ஆகிறது கிளைமாக்சில் தெளிவான விதையும் கிடைக்கிறது.
படத்தில் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கி றார்கள் யாரையும் வீண் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லோரையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மது நாகராஜன் படத்தை தயாரித்திருக்கிறார்.
நிறைய சஸ்பென்ஸ் திரில்லர் மர்டர் மிஸ்ட்ரி வரும் நிலையில் அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வராமல் புதிய கோணத்தில் கதை கருவையும் காட்சியையும் அமைத்து அதிர வைத்திருக்கிறார் இயக்குனர் ஷெரீப்.
ஒரு சிலரின் வன்மத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது இப்படி கூடவா மார்ச்சுவரியில் நடக்கும் என்று அதிர்ச்சி ஏற்பட வைக்கிறது.
அரோல் கரோலி இசை படத்திற்கு பக்க பலம்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா படத்தில் பல அதிர்ச்சி காட்சிகளை கண்களை உருத்தாமல் படமாக்கி இருக்கிறார்.
ரணம் -இறந்த பின்னும் பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதை.